இது புதுசு
கியா கேரன்ஸ்

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான கியா கேரன்ஸ்

Published On 2021-12-16 09:17 GMT   |   Update On 2021-12-16 09:17 GMT
கியா இந்தியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய கேரன்ஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது.


கியா இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய கேரன்ஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் கியா நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும். புதிய எஸ்.யு.வி. மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

புதிய கேரன்ஸ் மாடல் கியா செல்டோஸ் மாடலில் பயன்படுத்தப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்ப்லிட் ரக லைட்டிங், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன.



கியா கேரன்ஸ் மாடலில் 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனும் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், யு.வி.ஓ. கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ஸ்பாட் லைட்கள், ஆம்பியண்ட் மூட் லைட்டிங் மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News