இது புதுசு
வோக்ஸ்வேகன் டிகுவான் பேஸ்லிப்ட்

அசத்தல் அம்சங்களுடன் புது டிகுவான் பேஸ்லிப்ட் இந்தியாவில் அறிமுகம்

Update: 2021-12-07 08:09 GMT
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டிகுவான் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


வோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 31.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.

புதிய டிகுவான் பேஸ்லிப்ட் மாடல் நைட்ஷேட் புளூ, பியூர் வைட், ஆனிக்ஸ் வைட், டீப் பிளாக், டால்பின் கிரே, ரிப்ளெக்ஸ் சில்வர் மற்றும் கிங்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் டூயல் பாட் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட பம்ப்பர், பெரிய ஏர் இன்டேக் வழங்கப்பட்டு இருக்கிறது.வோக்ஸ்வேகன் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News