கார்

அடுத்த மாதம் இந்தியா வரும் லம்போர்கினி உருஸ் S

Published On 2023-03-23 14:02 GMT   |   Update On 2023-03-23 14:02 GMT
  • லம்போர்கினி நிறுவனத்தின் புதிய உருஸ் எண்ட்ரி லெவல் மாடல் அறிமுக விவரம் வெளியானது.
  • சர்வதேச சந்தையில் உருஸ் S மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்தாலியை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான லம்போர்கினி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த உருஸ் S மாடலை இந்தியாவுக்கு கொண்டு வருகிறது. புதிய உருஸ் S எஸ்யுவி மாடல் ஏப்ரல் 13 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என லம்போர்கினி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

இந்தியாவில் லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக லம்போர்கினி உருஸ் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு லம்போர்கினி விற்பனை செய்த ஒட்டுமொத்த கார்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உருஸ் எஸ்யுவி யூனிட்கள் இடம்பிடித்தன. கடந்த ஆண்டு மட்டும் லம்போர்கினி நிறுவனம் 200-க்கும் அதிக உருஸ் மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது.

 

புதிய லம்போர்கினி S மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புறம் குவாட் எக்சாஸ்ட் அவுட்லெட்கள், வெண்டெட் பொனெட் மற்றும் கார்பன் ஃபைபர் ரூஃப் உள்ளன. மேலும் டூயல் டோன் இண்டீரியர் தீம், செயற்கைக்கோள் சார்ந்த நேவிகேஷன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் டிஜிட்டல் கார் கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

லம்போர்கினி உருஸ் S மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 666 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News