பைக்

150கிமீ ரேஞ்ச் வழங்கும் எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் டிவிஎஸ்

Published On 2025-10-26 14:58 IST   |   Update On 2025-10-26 14:58:00 IST
  • புதிய M1-S மாடலில் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டை டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய M1-S எலெக்ட்ரிக் மேக்சி-ஸ்கூட்டரை EICMA 2025 இல் காட்சிப்படுத்த தயாராகி வருகிறது. டிவிஎஸ் நிறுவனம் EICMA வர்த்தக கண்காட்சியில் ஆறு புதிய தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த உள்ளது. மேலும் M1-S இந்த அறிமுகத்தின் ஒரு பகுதியாகும்.

புதிய டிவிஎஸ் M1-S, சிங்கப்பூரை தளமாகக் கொண்ட மின்சார மொபிலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனமான ION Mobility உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில்டிவிஎஸ் ஒரு முதலீட்டாளராக உள்ளது. முதலில் ION M1-S என்று அழைக்கப்பட்ட இந்த மின்சார மேக்சி ஸ்கூட்டர், டிவிஎஸ்-இன் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் தயாரிப்பு மேம்பாடு, செயல்பாடுகள் மற்றும் காப்புரிமை ஆகிய நிபுணத்துவத்தில் இருந்து பயனடைகிறது.

இந்த ஸ்கூட்டரில் 4.3kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்பட்டுள்ள மோட்டார் 16.76bhp பவர், 45Nm டார்க் உற்பத்தி செய்கிறது. M1-S வெறும் 3.7 வினாடிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். மேலும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்கும்.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, டிவிஎஸ் M1-S ஒரு ஆக்ரோஷமான மற்றும் ஏரோடைனமிக் முன்பக்க அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப்கள் டிஆர்எல்-கள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை மற்றும் ஒரு நேர்த்தியான பின்புற கிராப் ரெயில் ஆகியவை உள்ளன. இது ஒரு ஸ்போர்ட்டி தோற்றம் கொண்டிருக்கிறது.



புதிய M1-S மாடலில் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, மியூசிக் கண்ட்ரோல், நேவிகேஷன் மற்றும் அழைப்பு/எஸ்எம்எஸ் நோட்டிஃபிகேஷன் அலர்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட் கீ சிஸ்டம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரின் இந்திய வெளியீட்டை டிவிஎஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனினும், புதிய M1-S இந்தோனேசியாவில் அறிமுகமான பிறகு இந்தியாவின் பிற பகுதிகளிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News