பைக்

சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2023-04-26 20:30 IST   |   Update On 2023-04-26 20:30:00 IST
  • சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விலை மாற்றப்படுகிறது.
  • வெளியீட்டு நிகழ்வில் சிம்பில் ஒன் மாடலின் வினியோக விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- சிம்பில் ஒன் மாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. அதன்படி சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை விவரங்கள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக 2021 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிம்பில் ஒன் விலையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதன்பின் இந்த ஸ்கூட்டரின் பேட்டரி பேக் மாற்றப்பட்டது. இதன் காரணமாக ஸ்கூட்டரின் விலையும் மாற்றப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 8.5 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சம் 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

முன்னதாக சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை இந்த ஆண்டு துவங்கியது. இந்த ஆலையிலேயே சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த ஆலையில் ஆண்டுக்கு பத்து லட்சம் யூனிட்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். சிம்பில் ஒன் மாடலின் வினியோகம் பற்றிய தகவல்கள் வெளியீட்டின் போது அறிவிக்கப்படலாம். 

Tags:    

Similar News