பைக்
null

நீங்க ஓட்ட வேண்டாம், அதுவா போகும்.. வைரலாகும் ஒலா சோலோ டீசர்

Published On 2024-04-02 12:59 GMT   |   Update On 2024-04-02 13:08 GMT
  • உலகின் முதல் தானியங்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.
  • மக்களை முட்டாளாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்டுள்ளார். ஓலா சோலோ என்று அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகின் முதல் தானியங்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விவரங்கள் எதையும் அறிவிக்காமல், அது தொடர்பான வீடியோவை பாவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் நேற்று (ஏப்ரல் 1) முட்டாள்கள் தினத்தன்று வெளியிட்டு இருந்தார். பலரும் இப்படி ஒரு வாகனம் சாத்தியமில்லை என்றும், இது மக்களை முட்டாளாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும் கமெண்ட் செய்தனர்.

  


இந்த நிலையில், நேற்றைய வீடியோ யாரையும் முட்டாளாக்குவதற்காக வெளியிடப்படவில்லை என்று பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர், "இது முட்டாள்கள் தினத்துக்கான ஜோக் இல்லை! நேற்று நாங்கள் ஓலா சோலோ-வை அறிவித்தோம். அது வைரலானது, பலரும் அது உண்மைதானா அல்லது முட்டாள்கள் தின நகைச்சுவையா என்று விவாதித்தனர்."



"அந்த வீடியோ மக்களை சிரிக்க வைப்பதற்காகவே உருவாக்கப்பட்டு என்றாலும், அதற்கு பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். மேலும், அதற்கான ப்ரோடோடைப்களும் உள்ளன. இது எங்களின் பொறியியல் குழுக்களால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது."

"எதிர்கால மொபிலிட்டி மற்றும் எங்களது பொறியியல் குழுக்கள் தானியங்கி, தானாக பேலன்ஸ் செய்து கொள்ளும் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருகின்றன. இவற்றை எங்களது எதிர்கால வாகனங்களில் நீங்கள் பார்க்க முடியும்," என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

Similar News