null
weekly rasipalan- தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கான வார ராசிபலன்
- வார ராசிபலன்
- 4 ராசிபலன்களுக்கான வார ராசிபலன்.
தனுசு
திருமணத்தடை அகலும் வாரம். ராசிக்கு குரு சுக்கிரன் செவ்வாய் சனி பார்வை. அர்த்தாஷ்டம சனியால் திருமணம் தடைபடாது. கோச்சாரம் சாதகமாக உள்ளது. அதிகப்படியான திருமணம் நிச்சயமாகும். பிறருக்கு நன்மை மனப்பான்மை உண்டாகும். மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும். தைரியம் மிகுதியாக இருக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். தொழில் கடன்கள் குறையத் துவங்கும். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும்.
புத்திர பிராப்த்தம் ஏற்படும். சிலர் விருப்ப ஓய்வு பெறலாம். குடும்ப சூழல் காரணமாக ஆரோக்கியம் காரணமாக கல்வியில் ஏற்பட்ட தடைகள் பாதிப்புகள் அகலும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். தேவையற்ற வம்பு, வழக்குகளை தவிர்க்கவும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும். வரலட்சுமி நோன்பு நாளில் மஞ்சள் அபிஷேகம் செய்து மகாலட்சுமியை வழிபடவும்.
மகரம்
முத்தாய்பான முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசிக்கு சூரியன் புதன் பார்வை உள்ளதால் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். ஆன்ம பலம் பெருகும். மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான சாதகமான பலன்களும் நடக்கும். வேற்று இனத்தவரின் ஆதரவு கிடைக்கும்.
பண வரவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் சாதனை படைப்பார்கள். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். அரசாங்க வேலைக்கு அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். வீடு, வாகன யோகம் சிறப்பாக அமையும்.
சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக் கூர்மை கூடும். அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். வரலட்சுமி நோன்பு நாட்களில் அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
கும்பம்
ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். ராசியில் ராகு 7-ல் கேது 8-ல் செவ்வாய் நிற்பதால் பெண்களுக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை நீடிக்கும். கற்ற கல்வியால் வெற்றி புகழ் மதிப்பு, மரியாதை கிடைக்கும். தாய், தந்தையின் அன்பும், ஆதரவும் பெருகும். பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து இணைவார்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர் பார்த்தபடி பதவி கிடைக்கும்.
அரசாங்க காரியங்களில் இலாபமும் அனுகூலமும் ஏற்படும். சிலர் தொழில் நிமித்தமாக குறுகிய காலம் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். கூலித் தொழிலாளிகளின் நிலமை சீராகும். ஆடி மாதம் என்பதால் சாலையோர பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும்.
உயர்ந்த ரக வாகன வசதி அமையும். பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள். சிலர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில், அதிக கடன் வாங்கி சமயத்தில் சிரமப்படுவார்கள். எதிரிகள் தொல்லை குறையும். சிலருக்கு தேவையற்ற பயணங்கள் உண்டாகும். வரலட்சுமி விரத நாளில் சந்தன அபிஷேகம் செய்து மஹாலக்ஷ்மியை வழிபடவும்.
மீனம்
சுப விசேஷங்கள் கைகூடும் வாரம். ராசி அதிபதி குருபகவான் அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இது விபரீத ராஜயோக அமைப்பாகும். சிலருக்கு மனைவி மூலம் அதிர்ஷ்ட பணம், சொத்து கிடைக்கும் அல்லது வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு. வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறலாம்.
சிலர் வாகனத்தை மாற்றலாம். குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் பழைய கதை பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். திருமண தடை அகலும். குழந்தை பேறு உண்டாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலவிய ஏற்ற இறக்கங்கள் சமன்படும்.
ஆன்லைன் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் உயரும். சுய ஜாதக பரிசீலனை செய்த பிறகு புதிய தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு இரவும், பகலும் படித்த படிப்பு கை கொடுக்கும். உடல் அசதி, சளி இருமல் போன்ற சிறுசிறு அசவுகரியம் இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகமாகும். வரலட்சுமி விரத நாளில் கலச பூஜை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.