மிதுனம் - வார பலன்கள்

வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை

Published On 2025-07-27 10:32 IST   |   Update On 2025-07-27 10:33:00 IST

27.7.2025 முதல் 2.8.2025 வரை

எதிர்கால வாழ்க்கையை திட்டமிடும் வாரம். ராசியில் குரு, சுக்ரன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றிக்கனியை பறிக்காமல் விடமாட்டீர்கள். அரசு வேலை தேடியவர்களுக்கு மத்திய அரசாங்கப் பணி கிடைக்கும். கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் திரும்ப கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும்.

கவுரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு இந்த வாரம் வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். வாடிக்கையாளரிடம் நட்பு மற்றும் பாராட்டு வியாபாரிகளுக்கு அதிக லாபம் பெற்றுத்தரும். ஆடி தள்ளுபடியில் பெண்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பார்கள்.

மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். மிதுன ராசியினருக்கு ஆவணி மாதம் தடையில்லாமல் திருமணம் நடக்கும். ஆரோக்கிய குறைபாடு இருந்த இடம் தெரியாது. ஆடிப்பூர நன்னாளில் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News