வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை
20.4.2025 முதல் 26.4.2025 வரை
அனுகூலமான வாரம். ராசிக்கு செவ்வாயின் பார்வை இருப்பதால் ஏழரைச் சனியால் இழந்த இன்பங்களை மீட்டெடுப்பீர்கள். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மாறும். இது நாள் வரை பட்ட கடன் மற்றும் அவமானங்களில் இருந்து மீள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இழுத்தடித்த வம்பு, வழக்குகள் முடிவுக்கு வரும். சிலருக்கு பயணங்களால் அயர்ச்சியும், சோர்வும் உண்டாகும். வாழ்க்கைத் துணை உங்களை புரிந்து கொள்வார். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என சுப செலவுகள் அதிகரிக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ஊர் மாறலாம் அல்லது வீடு மாறலாம். போலி பத்திரம், போலி கையெழுத்து போன்றவற்றால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். சிலருக்கு மாமனாருடன் மன பேதம் உண்டாகும். பெண்களுக்கு தாய் வழிச் சொத்து பிரச்சனை முடிவிற்கு வரும். சிலர் ஆடம்பர வீடு கட்டி குடியேறுவார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406