மகரம் - வார பலன்கள்

இந்த வார ராசிப்பலன்

Published On 2023-05-21 13:52 IST   |   Update On 2023-05-21 13:53:00 IST

22.5.2023 முதல் 28.5.2023 வரை

அதிர்ஷ்டமான வாரம்.4,11ம் அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் முன்னேற்றம் தரும் மாற்றங்கள் நடக்கும். இதுவரை வாழ்க்கையில் நிலவிய மந்த நிலை மாறும்.புதிய மனிதனாக மாறுவீர்கள். உங்களின் மதிப்பு அந்தஸ்து உயரும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்தும். ரியல் எஸ்டேட், விவசாயம், கட்டுமானத் துறையில் இருப்பவர்களின் தனித்திறமை மிளிரும்.

இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் நிலவிய தடைகள் விலகும். அடிப்படைத் தேவைக்கு திணறியவர்களுக்கு சிறிய முயற்சியில் பெரிய வருமானம் கிடைக்கும். ஏமாற்றம் மன அழுத்தம் குறையும்.பூர்வீகச் சொத்தில் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரத்து டன் நிலவிய மாறுபட்ட கருத்து பேச்சு வார்த்தையில் சுமூகமாகும். திருமண முயற்சி வெற்றி தரும்.

வெளிநாட்டு பயணத்தில் நிலவிய தடைகள் விலகும்.26.5.2023 இரவு 8.50 முதல் 29.5.2023 காலை 8.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு உழைப்பு அதிகமாகி களைப்பும், சோர்வும் ஏற்படும்.சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயம் நிலவும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News