வார ராசிபலன் 15.3.2026 முதல் 21.3.2026 வரை
கும்பம்
புண்ணியபலன்கள் அதிகரிக்கும் வாரம். ராசியில் உள்ள செவ்வாய் புதன் ராகுவிற்கு குரு பார்வை உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறுகிறது. பொருளாதார நிலைமை மேம்படும். கொடுக்கும் வாக்குறுதி பலிக்கும். தோல்வி மனப்பான்மை விலகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பதவியில் நிலவிய அவப்பெயர்கள் விலகும். அரசியல்வாதிகளுக்கு உயர் பதவியில் அமரும் பாக்கியமுண்டு. பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும். காதல் திருமண முயற்சி சித்திக்கும்.
சிலருக்கு மறுமணம் நடக்கும். கடன் பிரச்சினையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். விண்ணப்பித்த வீடு, வாகன கடன் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். உடல் பாதிப்புகள் அகலும். சிலர் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை தவணை முறையில் வாங்குவீர்கள். திருமணமானஇளம் பெண்களுக்கு கருவுறுதல் நடைபெறும் வாய்ப்புள்ளது. அமாவாசை அன்று வயது முதிர்ந்தவர்களின் நல்லாசி பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406