ஆன்மிக களஞ்சியம்

உபய தோமுகி பூஜை

Published On 2023-12-30 12:49 GMT   |   Update On 2023-12-30 12:49 GMT
  • கால் நடைகளே ஒருவரது பொருளாதார மதிப்பீட்டிற்கு அளவு கோலாக இருந்தது.
  • ஆதலால் செல்வத்தை ‘மாடு’ என்ற சொல்லாலே குறிப்பிட்டு வந்தனர்.

பொன்னுக்கும் பொருளுக்கும் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன.

கால் நடைகளே ஒருவரது பொருளாதார மதிப்பீட்டிற்கு அளவு கோலாக இருந்தது.

ஆதலால் மாடுகள் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது.

நாட்டின் பொருளாதார துறையில் தனிச் செல்வாக்கு மாட்டுக்கு இருந்தது.

ஆதலால் செல்வத்தை 'மாடு' என்ற சொல்லாலே குறிப்பிட்டு வந்தனர்.

''கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு ''மாடு'' அல்ல மற்றயவை என்று செல்வத்தை மாடு என்னும் பொருள்பட வள்ளுவரும் உரைக்கின்றார்.

பசுக்கள் ஒரு நாட்டின் செல்வமாக மட்டுமல்ல. பிற விலங்குகளைப் போல் பசுவையும் ஒரு விலங்காக கருதக்கூடாது.

எள்ளைத் தானிய மென்றும், பசுவை விலங்கு என்றும் எண்ணக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பண்டைய காலத்தில் பகைவர் நாடு மீது படை எடுப்பதற்கு முன்னால் 'வெட்சி' மாலை சூடி பகை நாட்டு பசுக்களை கவர்ந்து வருவார்கள்.

பின் பசுவை பறிகொடுத்த நாட்டு வீரர்கள் ''கரந்தை மாலை சூடி வெட்சி'' மாலை சூடி கவர்ந்து சென்ற நாட்டினர் மீது படையெடுத்து பசுக்களை மீட்டு வருவார்கள்.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?

ஒரு நாட்டின் பொருளாதாரம் பசுக்களால் தான் நடைபெற்றது.

அதனை அழித்து விடக்கூடாது என்பதுதான்.

Tags:    

Similar News