ஆன்மிக களஞ்சியம்

துளசியின் சிறப்பும் பெருமையும்

Published On 2024-02-02 12:30 GMT   |   Update On 2024-02-02 12:30 GMT
  • எத்தனை வகைப் பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லா விட்டால் அது நந்தவனம் ஆகாது.
  • துளசி மட்டும் இருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகி விடும்.

எத்தனை வகைப் பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லா விட்டால் அது நந்தவனம் ஆகாது.

துளசி மட்டும் இருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகி விடும். துளசி படர்ந்த இடம் பிருந்தாவனம் ஆகும்.

துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா.

துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு 1,000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.

பவுர்ணமி, அம்மாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை எண்ணை தேய்த்துக் கொண்டு துளசியை பறிக்க கூடாது.

அதிகாலை பொழுதும் சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டே துளசியை பறிக்க வேண்டும்.

துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.

விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்.

Tags:    

Similar News