ஆன்மிக களஞ்சியம்

கல்வி, செல்வம், முக்தி அருளும் துளசி மந்திர சிறப்பு!

Published On 2024-05-27 12:12 GMT   |   Update On 2024-05-27 12:12 GMT
  • சிவபெருமான் பார்வதியை அடைய வழிபட்ட துளசியே!
  • எல்லாத் தேவர்களும், தேவ மாதர்களும், கின்னரர்களும் வணங்கிய துளசியே!

மாயோனுக்கு மகிழ்ச்சி கொடுப்பவளும், பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவளும், பகவானால் திரு முடியில் ஏற்றுக் கொள்பவளும், திருமாலின் சர்வாக்க சம்பந்தம் பெற்றவளுமான துளசியே, உன் இலைகளால் பூஜிப்பவர்களுக்கு அருள் செய்வாயாக!

பகவானின் பூஜைப் பொருட்களுள் மிக முக்கியமானவளும், பகவானின் திரு வடிகளை அடைய இடையூறான பாவங்களைப் போக்குபவளும்,

உலக நன்மைக்காகவும், கோமதி ஆற்றில் கிருஷ்ணனால் வளர்க்கப்பட்டவளும், கோகுல வளர்ச்சிக்காகவும், கோபியர்களின் நலத்திற்காகவும், கம்சனுடய அழிவிற் காகவும் கண்ணனால் பூஜிக் கப்பட்ட துளசியே!

வசிஷ்டரின் ஆணைப்படி ராமருக்கு முன்னால் சரயூ நதிக்கரையில் அரக்கர்களின் அழிவுக்காகவும், முனிவர்களின் தவ விருத்திக்காகவும், நடப்பெற்ற துளசியே!

ராமனின் பிரிவால் அசோக வனத்தில் துயருற்ற சீதா பிராட்டியார், அறம் வளர்த்த நாயகனை அடைவதற்காக வணங்கிய துளசியே!

சிவபெருமான் பார்வதியை அடைய வழிபட்ட துளசியே!

எல்லாத் தேவர்களும், தேவ மாதர்களும், கின்னரர்களும் வணங்கிய துளசியே!

தண்ட காரண்யத்தில் உலக நன்மையின் பொருட்டு ராமர், சீதை, லக்குமணன் ஆகியோர் வழிபட்ட துளசியே அறன்மிக ஆரண்யத்திலும் கயையிலும், பித்ருக்கள் வணங்கிய துளசியே!

மூவுலகிலும் பெருமை பெற்ற கங்கையைப் போன்ற துளசியே, சுக்ரீவன் வாலியின் அழிவிற்கு ரிஷ்ய முக பர்வதத்தில் தொழப்பட்ட துளசியே!

கடலைக்கடந்து சீதையைக் காண அனுமனுக்கு உதவிய துளசியே!

தேவர்களுக்குத் தலைவியே மாலுக்கு பிரியமானவளே! உன்னைச் சரண் புகுந்து வழிபடுகின்றேன். எனக்கு அருள் புரிவாயாக.

இந்த துளசியின் ஸ்தோத் திரத்தை துவாதசி திதியில் கூறினால் 32 ஆபிசாரங்களும் விலகும். இளமை, முதுமை ஆகிய பருவங்களில் செய்த பாவங்கள் அகலும் இதில் சந் தேகமே இல்லை.

துளசியும், நாராயணனும் மகிழ்ச்சி அடைந்து செல்வத்தைத் தருவார்கள். பகைவர் அழிவர். நற்சுகமும், நற் கல்வியும் அடைவர். முக்தியும் கிடைக்கும்.

Tags:    

Similar News