ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம தியான ஸ்லோகம்
- ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம ஸ்லோகத்தில் வரும் தியான ஸ்லோகம்.
- இந்த ஸ்லோகம் நிறைய மகான்கள் பெற்ற ஞானத்தை அள்ளிவீசுகிறது.
ஸ்ரீ லலிதாம்பிகை தாயவள் எப்படி இருப்பாள் அவளை எவ்வாறு தியானிக்க வேண்டும் என்பதை தத்தாத்ரேயர்
ஆதிசங்கரர் போன்ற மகான்கள் தம் ஞானத்தால் அறிந்து வியந்து அதை யாவரும் உணரும் வண்ணம் அவர் தம்
அருளிய வார்த்தைகளால் மிளிரும் ஸ்லோகமே அருணாம் கருணாதரங்கிதாஷீம் என தொடங்கும்
ஸ்ரீ லலிதாசகஸ்ரநாம ஸ்லோகத்தில் வரும் தியான ஸ்லோகம்.
இந்த ஸ்லோகம் நிறைய மகான்கள் பெற்ற ஞானத்தை அள்ளிவீசுகிறது.
ஸ்ரீ லலிதாம்பிகை தாயவள் பாதம் போற்றிட அவள் போட்ட பிச்சையால் யாமே எம்முள்ளே அழுது புரண்டு
விம்மி ததும்பி தாயவள் அருள் கருணை அலைகளை தேடி தேடி அலைந்து கொண்டிருக்கும் பயணத்தில் ஏற்பட்ட ஒரு விளைவே இக்கட்டுரை.
எல்லாம் எம்முள்ளே யாமே எமக்கு அன்பர்களால் கிடைத்த விளக்கத்தோடு ஒரு உருவகபடுத்தி எம்மை யாமே
எம் சூட்சும தேகத்தில் உணர்ந்து மகிழ்ந்த ஒரு இறை சார்ந்த கற்பனையால் விளைந்த ஒரு கட்டுரை.
பிழை யாவும் எமது அரைகுறை ஞானமே. ஆகவே தயை கூர்ந்து பிழை பொருத்தருள்க !!