ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ பூமாதேவியுடன் ஸ்ரீ வரதராஜர்

Published On 2024-01-06 17:56 IST   |   Update On 2024-01-06 17:56:00 IST
  • ஸ்ரீ வரதராஜர் என்ற பெயர் இங்குள்ள உற்சவரையே குறிக்கும்.
  • ஆனால், இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் உற்சவரின் இருபுறமும் ஸ்ரீ பூமாதேவியே அருள் பாலிக்கிறார்.

ஸ்ரீ வரதராஜர் என்ற பெயர் இங்குள்ள உற்சவரையே குறிக்கும்.

எல்லா வைணவத் திருக் கோவில்களிலும் உற்சவருக்கு இரு புறமும், முறையே ஸ்ரீதேவி- பூதேவி நாச்சியார்கள் இருப்பர்.

ஆனால், இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள் உற்சவரின் இருபுறமும் ஸ்ரீ பூமாதேவியே அருள் பாலிக்கிறார்.

மாலிக்காபூரின் படையெடுப்பின்போது, பாதுகாப்பு கருதி இங்கிருந்த உற்சவ விக்கிரகங்கள் உடையார்பாளையம் ஜமீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

போர் அபாயம் நீங்கி, மீண்டும் உற்சவர்களை எடுத்து வந்தபோது இரண்டு உபய நாச்சியார்களும் பூமி பிராட்டியாகவே அமைந்து விட்டனராம்!

பிரம்மனின் யாகத்தில் இருந்து தோன்றியவர் என்பதால், வெப்பத்தின் காரணமாக பெருமாளின் திருமுகத்தில் வடுக்கள் ஏற்பட்டனவாம்.

அவற்றை உற்சவரின் திருமுகத்தில் காணலாம்.

Tags:    

Similar News