ஆன்மிக களஞ்சியம்

சோழ பாண்டிய மன்னர்களின் கொடையை விளக்கும் 156 கல்வெட்டுகள்

Published On 2024-04-10 11:32 GMT   |   Update On 2024-04-10 11:32 GMT
  • வலம்புரி விநாயகரையும் சுப்பிரமணியரையும் எழுப்பியருளியவர் மும்முடி திம்மரசர்.
  • விபூதி பிரகாரத்து மதிற்சுவரைத் தோற்றுவித்தவன் திருநீற்றுச் சுந்தரபாண்டியன்.

பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோவிலுக்குப் பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்குக் கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை.

இத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள் மட்டுமன்றிப் போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள்,

மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளைச் சுமார் 154 கல்வெட்டுகள் அறிவிக்கின்றன.

ஐந்து பிரகாரங்களைக் கொண்ட இத்திருத்தலத்தின் முதலாம் பிராகாரத்திலான துவார பாலகர் திருவுருக்களைச் செய்வித்தவர் இளைய நயினார் மகன் தெய்வங்கள் பெருமாள்.

நீலகண்ட நாயக்கர் நான்காம் பிரகாரத்தில் அகிலாண்டநாயகியின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளச் செய்துள்ளார்.

சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் இக்கோவிலின் உற்சவ மண்டபத்தை உருவாக்கினார்.

முதற் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள ஷ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர்.

சந்தபேந்திரன் நான்காவது பிரகாரத்தில் உள்ள மேலக்கோபுரத்தினை எழுப்பினார்.

வலம்புரி விநாயகரையும் சுப்பிரமணியரையும் எழுப்பியருளியவர் மும்முடி திம்மரசர்.

விபூதி பிரகாரத்து மதிற்சுவரைத் தோற்றுவித்தவன் திருநீற்றுச் சுந்தரபாண்டியன்.

எம்பிரானின் திருவிளையாடல்களில் ஒன்றான திருநீறு தங்கமாக மாறிய அற்புத காலமும் இதுவேயாகும்.

பெரும் சிவனடியாரான வீரசோம ஈசுவரன் என்னும் ஹொய்சால மன்னன் இத்திருத்தலத்தின் கிழக்கில் ஒரு ஏழுநிலைக் கோபுரத்தை எழுப்பினான்.

பாண்டிய அரசர்களான மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் தமது பிறந்த நாளை யொட்டி இத்திருத்தலத்திற்கு நிபந்தங்களை வழங்கியுள்ளனர்.

திருபுவனச் சக்கரவர்த்தி என்னும் சிறப்புற்ற இராஜேந்திர சோழன் (கங்கை கொண்ட சோழன்) இருபத்தைந்து வேலி நிலத்தை இத்திருத்தலத்திற்கு இறை பணிக்காக அளித்தான்.

Tags:    

Similar News