ஆன்மிக களஞ்சியம்

சூரிய தேவன் புராண வரலாறு

Published On 2024-01-13 12:19 GMT   |   Update On 2024-01-13 12:19 GMT
  • மகாவிஷ்ணு தம் உந்திக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார்.
  • பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்குத் துணைபுரிய சப்த ரிஷிகளை உண்டாக்கினார்.

மகாவிஷ்ணு தம் உந்திக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார்.

திருமாலின் ஆணைப்படி நான்முகன் அண்டத்தைத் தோற்றுவித்தார்.

அண்டம் ஒரே இருள் சூழ்ந்திருக்க, ஓம் என்ற ஒலி பிறந்தது.

அவ்வொளியிலிருந்து சூரியன் தோன்றினான் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.

பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்குத் துணைபுரிய சப்த ரிஷிகளை உண்டாக்கினார்.

அவர்களில் ஒருவர் மரீசி என்ற முனிவர்.

அவருக்கு மகனாக உதித்தவர் காசியபர் என்ற முனிவர் காசியபர் 13 மனைவிகளை மணந்தார்.

அவர்களில் மூத்த மனைவி பெயர் அதிதி. அவள் மகனே சூரியன் என்று கூறப்படுகிறது.

உலகை பாதுகாக்கும் பொருட்டு நவக்கிரக குழு அமைக் கப்பட்டு, சூரியனுக்குத் தலைமைப் பதவி தரப்பட்டது.

ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரமுள்ள ரதத்தில் சூரியன் மேரு மலையைச் சுற்றி வலம் வருகின்றார்.

அவருக்குச் சாரதி அருணன் ஆவான்.

சூரியனுக்கு சமுங்கை, பிரபை, ரைவத இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் உள்ளனர்.

சூரியனுடைய மகன்கள் வைவஸ்தமனு, யமன், அசுவினி தேவர்கள், பிரதவன், ரைவ வஸ்தன்.

யமுனை என்ற மகளும் உண்டு.

Tags:    

Similar News