ஆன்மிக களஞ்சியம்

சிறு, சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க...

Published On 2024-05-27 12:04 GMT   |   Update On 2024-05-27 12:04 GMT
  • கண்ணுக்குத் தெரியாத சிறு, சிறு பூச்சிக்கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும்.
  • துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச்சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

கண்ணுக்குத் தெரியாத சிறு, சிறு பூச்சிக்கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும்.

அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும்.

இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச்சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊற வைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.

தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

Tags:    

Similar News