ஆன்மிக களஞ்சியம்

சீரடிக்கு சாய்நாதரின் வருகை

Published On 2023-11-27 12:18 GMT   |   Update On 2023-11-27 12:18 GMT
  • சீரடி இசுலாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து வாழ்ந்த கிராமம்.
  • அந்த முகம் கடவுளுக்கு இணையான பொலிவுடன் இருப்பதை கண்டு வணங்கினாள் கங்காபாய்!

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

சச்சிதானந்தாய தீமஹி

தன்னோ சாய் ப்ரசோதயாத்

கலியுகத்தில் கேட்டவருக்கு கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் சீரடி பாபாவை

ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும்.

சீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.

இன்றைக்கு நாடி வந்தோர் அனைவருக்கும் நல்லன எல்லாம் வழங்கும், தினம் தினம் அற்புதங்கள் நடக்கும்

சீரடி புண்ணிய ஷேத்திரம் 1853ம் ஆண்டில் வெறும் 500 வீடுகள் மட்டும் உள்ள ஒரு குக்கிராமம் ஆகும்.

குக்கிராமத்தின் ஊர் தலைவர் பாட்டியா என்ற நாத்திகர்.

சீரடி விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் மட்டுமே நம்பி பெரும்பாலனவர்கள் ஏழ்மை நிலையில் வாழும் கிராமம்.

இசுலாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து வாழ்ந்த கிராமம்.

அக்கிராமத்தில் 60 வயது மதிக்கதக்க ஒரு மூதாட்டி வாழ்ந்து வந்தாள்.

அவள் பெயர் கங்காபாய். அவளது வீடு ஊரின் நடுவில் ஒரு வேப்பமரத்துடன் இருந்தது.

அவள் கணவன் காலமாகி பல வருடம் ஆகி இருந்தது.

அவளது மகன் சிறு வயதிலேயே காணாமல் போய் இருந்தான்.

யாரும் ஆதரவற்ற மனிதர்களுக்கு கடவுளே ஆதரவு என்பது போல கங்கா பாய்க்கு ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு நாள் விடியற்காலை 4 மணிக்கு கங்காபாய் வீட்டின் முற்றம் சுத்தப்படுத்தி கோலமிட வெளியே வருகையில் ஒரு அற்புத தரிசனத்தை கண்டார்.

அவரது வீட்டின் எதிரே உள்ள வேப்ப மரத்தின் அடியில் பக்கிரி தோற்றத்தில் ஒரு 16 வயது மதிக்கத்தக்க பாலகன் ஒருவன் தியான நிலையில் அமர்ந்து இருந்தான்.

அவனுடைய முகம் கடவுளுக்கு இணையான பொலிவுடன் இருப்பதை கண்டு வணங்கினாள் கங்காபாய்!

அந்த பக்கிரி தோற்றத்தில் இருந்த பாலகனே இன்று உலகம் முழுமைக்கும் கடவுளாக வணங்கும் சத்குரு ஸ்ரீ சீரடி சாய்பாபா

Tags:    

Similar News