ஆன்மிக களஞ்சியம்

செந்தூரக்காப்பு வழிபாடு

Published On 2023-12-15 11:40 GMT   |   Update On 2023-12-15 11:40 GMT
  • அசோகவனத்தில் அனுமன் சீதாவை பார்த்த போது அவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார்.
  • ராமபிரான் மங்களகரமாகவும், பத்திரமாகவும், இருப்பதன் சின்னமாக செந்தூரப்பொடி அணிந்து கொண்டார்.

அசோகவனத்தில் அனுமன் சீதாவை பார்த்த போது அவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார்.

அப்போது அனுமான் பல விளக்கங்களை நேரில் சொல்லி ராமபிரான் சுகமாகவும் பத்திரமாகவும் இருப்பதாகவும்

சீதா பிராட்டியாரின் நினைவாகவே இருப்பதாகவும் சீதாபிராட்டியாரைத் தேடித்தான் அலைந்துக் கொண்டு

இருக்கிறார் என்ற நல்ல செய்திகளைச் சொன்னார்.

இச்செய்திகளை கேட்டதும் சீதா மகிழ்ச்சி அடைந்து கீழே இருந்த சிந்தூரப் பொடியை எடுத்து நெற்றியில் அணிந்து கொண்டார்.

ராமபிரான் மங்களகரமாகவும், பத்திரமாகவும், இருப்பதன் சின்னமாக செந்தூரப்பொடி அணிந்துக் கொண்டார்.

உடனே அமனுர்பிரானும் ஸ்ரீராமபிரான் சகல மங்களங் களுடன் இருப்பதற்காக தானும் உடனே அங்கிருந்த

செந்தூரப்பொடியை எடுத்து உடம்பு முழுவதும் பூசிக் கொண்டார்.

இதனால் தான் நாம் அனுமாருக்கு சிந்தூரம் அணிவிக்கிறோம். நமது நெற்றியில் சிந்தூரப் பொட்டு அணிந்து கொள்கிறோம்.

Tags:    

Similar News