ஆன்மிக களஞ்சியம்
- இத்திருக்கோவில் கட்டுமானம் தொடர்பாக ஒரு கதை வழங்கி வருகிறது.
- இதற்கு பிரதியுபகாரமாக கோவிலின் சில பகுதிகளை அவர் கட்டிக்கொடுத்துள்ளார்.
இத்திருக்கோவில் கட்டுமானம் தொடர்பாக ஒரு கதை வழங்கி வருகிறது.
கி.பி.1516 முதல் 1535 வரை நெல்லை மாவட்டம் களக்காட்டை தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்த மன்னர் பூதலவீர உதயமார்த்தாண்டன்.
இவர் தீராத சரும வியாதியால் அவதிப்பட்டு வந்தார்.
ஜோதிடர்கள் அவரது ஜாதகத்தை ஆராய்ந்து இந்த நோய் நாகதோஷத்தால் உண்டானது என்றும் நாஞ்சில் நாட்டு நாகராஜா கோவிலில் வழிபடால் இந்த வியாதி தீரும் என கூறினர்.
அப்போது நாகர்கோவில் நாகராஜா கோவிலின் சிறப்பு பற்றி அறிந்து ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து கோவிலுக்கு நேர்ச்சை செய்து வழிபட்டதால் அந்த மன்னரின் சருமநோய் தீர்ந்தது.
இதற்கு பிரதியுபகாரமாக கோவிலின் சில பகுதிகளை அவர் கட்டிக்கொடுத்துள்ளார்.