ஆன்மிக களஞ்சியம்

சங்கு தீர்த்த திருக்குளம்

Published On 2023-09-29 12:18 GMT   |   Update On 2023-09-29 12:18 GMT
  • சங்கு தீர்த்த புஷ்கரம் என்பது தீர்த்தங்களுக்கு உரிய ஒரு புண்ணிய காலமாகும்.
  • இந்தத் திருத்தலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் முக்கியமானவை.

திருக்கழுக்குன்றம் தலத்துக்குரிய நதி பாலாறு. இதனை குகநதி, ஷீரநதி என்றும் அழைப்பர்.

நம் பாரத பூமியின் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும்

சங்கு தீர்த்தம் என்னும் புனிதக் குளத்திலே சங்கமித்து உள்ளன.

இந்தத் திருத்தலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் முக்கியமானவை.

அவை, இந்திர தீர்த்தம், சம்புதீர்த்தம், ருத்ரகோடி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம், மெய்ஞ்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம், அகலிகை தீர்த்தம், சம்பாதி தீர்த்தம் என்பனவாகும்.

இந்தப் பன்னிரண்டு தீத்தங்களின் தலையாயதாய் சிறப்பின் மணிமகுடமாய் உலக மக்களால் போற்றப்படுவதுமான

நன்னீரை உடைய சங்கு தீர்த்தம் என்னும் பெரிய தடாகம் அமைந்துள்ளது.

இதன் நடுவில் நீராழி மண்டபம் அமைந்துள்ளது.

இதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறப்பதால் இது சங்கு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

மார்க்கண்டேய முனிவர் இங்கு இறைவனை வேண்டி சங்கு பெற்றார்.

அது முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது.

சங்கு தீர்த்த புஷ்கரமேளா என்பது குருபகவான் கன்னி ராசியில் வரும்நாளே இத்திருநாளாகும்.

இவ்வேளையில் மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் சங்கு தீர்த்த குளத்துக்குள் வந்து சங்கமிக்கின்றன என்பது ஐதீகம்.

அப்போது இறைவனுக்கு தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.

பக்தர்களும் நீராடி இறையருள் பெறுவர்.

சங்கு தீர்த்த புஷ்கரம் என்பது தீர்த்தங்களுக்கு உரிய ஒரு புண்ணிய காலமாகும்.

அக்காலத்தில் நீராடுதல் சிறப்பாகும்.

Tags:    

Similar News