ஆன்மிக களஞ்சியம்

சக்கரத்தாழ்வாரின் பெருமையை விளக்கும் நூல்

Published On 2023-12-28 12:38 GMT   |   Update On 2023-12-28 12:38 GMT
  • தமிழில் அமைந்த ‘ழ’ என்ற எழுத்தின் பெருமையை இந்த பாடல்கள் மூலமாக சிறப்பித்து பேசியுள்ளார்கள்.
  • நன்மைகள் பல உண்டாகும் என்றும் அப்பெரியவர் கூறியுள்ளார்.

சக்கரத்தாழ்வாருக்கு சுதர்ஷனம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

அந்த சுதர்ஷனனை பற்றி சுதர்ஷன சதகம் என்று 100 பாடல்கள் அடங்கிய ஒரு நூல் ஒரு பெரியவரால் பாடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடலும் சக்கரத்தாழ்வாரின் பெருமையை அப்பெரியவர் பல சான்றுகளுடன் விளக்கியும் கூறியுள்ளார் அந்த நூலை நாம் தினந்தோறும் படித்தால் குறைகள் எல்லாம் நீங்கும்.

நன்மைகள் பல உண்டாகும் என்றும் அப்பெரியவர் கூறியுள்ளார்.

கஜேந்திர மோட்சம், அம்பரிகன் வரலாறு, ஆகியவை எல்லாம் சக்கரத்தாழ்வாரின் பெருமையையும் ஏகாதசி விரதத்தின் உயர்வையும் கூறுகின்றன.

அந்த சுதர்ஷன சதகம் அதுபோன்ற சுதர்ஷன சதக நாமம் ஆகிய நூல்களை நாமும் பாராயணம் செய்தோமானால் நலம் பல பெறலாம்.

குறைகள் நீங்கும். கிரக தோஷம் விடுபடும்.

ஆகவே ஆழ்வார்கள் பண்ணிரென்டு பேர்களும் மிகவும் போற்றி புகழப்பெற்ற சக்கரத்தாழ்வாரின் பெருமையை

கோதை நாச்சியார் (ஆண்டாள்) ஆழிமழை கண்ணா என்கின்ற திருப்பாவை பாடல்கள் மூலமாக சிறப்பித்து பாடியுள்ளார்.

தமிழில் அமைந்த 'ழ' என்ற எழுத்தின் பெருமையை இந்த பாடல்கள் மூலமாக சிறப்பித்து பேசியுள்ளார்கள்.

ஆகவே ஆழிமழை கண்ணா என்ற பாசுரத்தை நாமும் பாராயணம் செய்வோமானால் நாட்டில் மழை பொழியும், வளம் பெருகும், தீமைகள் அகலும் மேன்மேலும் நன்மைகள் உண்டாகும்.

Tags:    

Similar News