ஆன்மிக களஞ்சியம்

பிரதோஷ பூஜை

Published On 2023-12-23 11:18 GMT   |   Update On 2023-12-23 11:18 GMT
  • நந்தி வாகனத்தில் பிரதோஷ நாயகர் வரும் காட்சி அருள்மழை பொழிவது போன்று இருக்கும்.
  • ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதோஷம் வருகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதோஷம் வருகிறது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரதோஷ பூஜையில் பக்தர்கள் ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள்.

திருவண்ணாமலை தலத்திலும் அதேநிலை தான் இருந்தது.

பிரதோஷ பூஜை தினத்தன்று அந்த காலத்தில் 50 பேர் வந்தாலே அதிகம்.

ஆனால் இப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரளுகிறார்கள் என்று திருவண்ணாமலையில் வாழும் பழம்பெரும் சிவாச்சாரியாரான தியாகராஜ சிவாச்சாரியார் நினைவு கூர்ந்தார்.

சமீப காலமாக திருவண்ணாமலையில் பிரதோஷ தினத்தன்று வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

பெரும்பாலான பக்தர்கள் அன்றைய தினம் விரதம் இருந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை பழக்கத்தில் வைத்துள்ளனர்.

அன்றையதினம் மாலை நந்திக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பிறகு பிரதோஷ நாயகர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்.

நந்தி வாகனத்தில் பிரதோஷ நாயகர் வரும் காட்சி அருள்மழை பொழிவது போன்று இருக்கும்.

மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் பிரதோஷ நாயகர் எழுந்தருளுவார்.

அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அப்போது பக்தர்கள் அரோகரா என்று முழக்கிமிடுவார்கள்.

அந்த சமயத்தில் சிவபுராணம் மற்றும் நந்தி புராணம் படித்தால் அளவற்ற பலன்கள் தேடி வரும் என்பது ஐதீகம் ஆகும்.

Tags:    

Similar News