ஆன்மிக களஞ்சியம்

பசுவந்தனை திருத்தல மூர்த்தியின் சிறப்பை உணர்த்தும் உண்மை சம்பவம்

Published On 2023-12-30 12:45 GMT   |   Update On 2023-12-30 12:45 GMT
  • 42-வது நாள் அவரது இரு கண்களும் இறையருளால் பார்வை வரப்பெற்றன.
  • தினசரி நீராடி பால் சொரிந்ததால்தான் இத்தலத்திற்கு பசுவந்தனை என்ற பெயர் ஏற்பட்டது.

எட்டையபுரத்திற்கு அருகிலுள்ள தெற்கு முத்தலாபுரம் என்ற கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பாநாயக்கர் என்பவர் நன்றாக இருந்த அவரது இரு கண்களும் பார்வையை இழந்து விட்டன.

அவர் இத்திருத்தலத்து இறைவன் மீது கொண்ட பக்தியினால் கோவிலுக்கு வந்து தினசரி வாவியில் நீராடி ஈசனை வழிபட்டு 41 நாட்கள் மணசோறு உண்டு விரதமிருந்தார்.

42-வது நாள் அவரது இரு கண்களும் இறையருளால் பார்வை வரப்பெற்றன.

இந்நிகழ்ச்சியினால் இத்தலத்து இறைவன் இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார்.

பசுவின் பாலை அருந்தி வளர்ந்த சுவாமிக்கு பசும்பால் அபிசேகம் செய்து வழிபட்டால் வேண்டுதல்கள் உடனடியாக

நிறைவேறி வருகிறது என்பதால் இத்தலமூர்த்திக்கு அன்பர்களால் தினசரி பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.

இத்திருக்கோவில் முன்பு சங்குச்சாமி சித்தர் "ஜீவ சமாதி" அமைந்துள்ளது.

பழமையும் சிறப்பும் மிக்க கோசிருங்கவாளி தீர்த்தத்தில்தான் ஆதிகாலத்தில் இறையுணர்வு மிக்க பசு ஒன்று

தினசரி நீராடி பால் சொரிந்ததால்தான் இத்தலத்திற்கு பசுவந்தனை என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த தீர்த்தம் கங்கை நீரைப்போல புனிதமாகக் கருதப்படுகிறது.

ஆண்டு தோறும் சித்திரை புதுவருட தினத்தன்று இவ்வூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருந்து மக்கள் வந்து கூடி

இத்திருக்குளத்தில் புனித நீராடி இறைவனை வழிபட்டு இறைவன் முன்பு புதிய பஞ்சாங்கத்தை சமர்ப்பித்து

புத்தாண்டு பொலிவுடன் விளங்கவும், விவசாயம் சிறக்கவும் வேண்டுகின்றனர்.

Tags:    

Similar News