ஆன்மிக களஞ்சியம்

பசுவைக்கொன்ற பாவத்தை தீர்க்கும் தலம்

Published On 2023-12-30 13:06 GMT   |   Update On 2023-12-30 13:06 GMT
  • உலகிலேயே மிகப்பெரிய பாவம் பசுவைக் கொல்வது தான்.
  • கும்பத்தில் சுற்றப்பட்டிருந்த பூணூல் அறுந்து விழுந்தது. அது லிங்கமாக மாறியது.

உலகிலேயே மிகப்பெரிய பாவம் பசுவைக் கொல்வது தான்.

அறிந்தோ, அறியாமலோ பசுவுக்கு தீங்கிழைத்திருந்தால் கும்பகோணம் மகாமக குளக்கரையின் தெற்கு பகுதியில் உள்ள கவுதமேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவர வேண்டும்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார்.

சிவபெருமான் அவரிடம் "நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை நிரப்பு.

அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை.

அதன்மீது ஒரு தேங்காயை வை. அதை மாவிலையால் அலங்கரி.

கும்பத்தில் நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை.

அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய். அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன்" என்றார்.

இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. கும்பம் மிதந்தது.

கும்பத்தில் சுற்றப்பட்டிருந்த பூணூல் அறுந்து விழுந்தது. அது லிங்கமாக மாறியது.

உபவேதநாதேஸ்வரர் என சிவன் பெயர் பெற்றார்.

Tags:    

Similar News