ஆன்மிக களஞ்சியம்

பாபநாசம் சர்ப்ப விநாயகர்

Published On 2024-01-04 16:08 IST   |   Update On 2024-01-04 16:08:00 IST
  • சர்ப்ப விநாயகரின் திருமுடிக்கு மேல் ஐந்தலை அரவு படம் விரித்து நிற்கிறது.
  • ராகு கேதுக்களின் இடர்களிலிருந்து விடுபட பாபநாசம் சர்ப்ப விநாயகரை பணிதல் வேண்டும்.

ராகு கேது இருவருக்கும் மிகவும் பிடித்த தலங்களுள் திருக்காளத்தியும் திருவாஞ்சியமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தலங்களாகும்.

ராகு பகவானுக்காகவும் கேது பகவானுக்காகவும் அல்லது இந்த இருவருக்குமாக சேர்ந்து வழி படத் தக்கத் தலங்கள் பல இருக்கின்றன.

ராமேசுவரம் மன்னார்குடிக்கு அருகே உள்ள திருக்களர், மயிலாடுதுறைக்கு அருகே உள்ள திருமணஞ்சேரி,

நவத்திருப்பதிகளில் இரட்டைத் திருப்பதி எனப்படும் திருத் தொலைவில்லி மங்கலம் தலங்களில் வழிபடுபவர்களுக்கு ராகு-கேதுவின் அருள் கூடும்.

பாபநாசம் சர்ப்ப விநாயகர் ராகு கேது தோசத்தை விரட்ட வல்லவர்.

சர்ப்ப விநாயகரின் திருமுடிக்கு மேல் ஐந்தலை அரவு படம் விரித்து நிற்கிறது.

இடை, இடைக்கச்சம், மார்பு, கரங்கள் என்று இவரது உடலை அரவமே அணி செய்கிறது.

ராகு கேதுக்களின் இடர்களிலிருந்து விடுபட பாபநாசம் சர்ப்ப விநாயகரை பணிதல் வேண்டும்.

Tags:    

Similar News