ஆன்மிக களஞ்சியம்

நோய்களை அகற்றும் சித்தர்கள் உருவம்

Published On 2024-02-03 12:04 GMT   |   Update On 2024-02-03 12:04 GMT
  • இவரை சுற்றி வந்து வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகமாகும்.
  • இத்தலத்தில் கருடக்கொடி சித்தர் பல ஆண்டுகள் வசித்ததாக சுவடி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாள் சன்னதிக்கு வலதுபுறம் ஆதிசங்கரர் சன்னதிக்கு நேர் எதிரில் உள்ள தூண்களில் ஒரு தூணில் ஸ்ரீ படுக்கை ஜடை சித்தரின் உருவம் உள்ளது.

இவரை சுற்றி வந்து வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகமாகும்.

சிவனுக்கு நேர் எதிரில் நந்தி பகவான் 4 தூண்கள் தாங்கியிருக்கும் சிறு மண்டபத்தில் உள்ளார்.

இந்த நந்தி சாந்தமாக இருப்பதால் அவருக்கு மூக்கணாங்கயிறு கிடையாது.

இந்த நந்தி மண்டபத்தின் வலது புறத் தூணில் ஸ்ரீ பிராணதீபிகா சித்தரின் உருவம் இடம் பெற்றுள்ளது.

இவரை வழிபட்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கையாகும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

அடுத்து மூன்றாவதாக அறியப்பட்டுள்ள ஸ்ரீ கருடக்கொடி சித்தர் உருவம் அருகில் உள்ள ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் கல்தூணில் உள்ளது.

இத்தலத்தில் கருடக்கொடி சித்தர் பல ஆண்டுகள் வசித்ததாக சுவடி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள திருக்குளத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாக குறிப்புகள் உள்ளன.

பெருமாள் கோவில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள ஆண்டாள் சன்னதி தூணில் இந்த சித்தரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமைகளில் கருடக்கொடி சித்தருக்கு அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கண் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாகும்.

சமீப காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களும், கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தலங்களுக்கு வருவது அதிகரித்தப்படி உள்ளது.

Tags:    

Similar News