ஆன்மிக களஞ்சியம்

முப்பத்தி முக்கோடி தேவர்களும் வாசம் செய்யுமிடம்

Published On 2023-12-30 12:51 GMT   |   Update On 2023-12-30 12:51 GMT
  • பசுவின் பின் பகுதியில் செல்வத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி வசிப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.
  • பசுவில் தான் மும்மூர்த்திகளும் முப்பத்தி முக்கோடி தேவர்களும் வசிக்கின்றனர்.

''நம்முடைய தார்மீக உணர்விற்கும், கலாச்சார வாழ்விற்கும் பண்பாட்டிற்கும் அடிப்படையாக அமைந்தது பசுவாகும்.

பதி, பசு, பாசம் என்னும் பொழுது ஆன்மையை பசு என்ற சொல்லாலேயே குறிப்பிடுகின்றோம், மாடுகளை கட்டி வைக்கும் இடமே தொழுவம் என்னும் கொட்டில் ஆகும்.

அறிவு தரும் ஆலயத்தை அறிவாலயம் என்று சொல்வது போல தொழுவுவதற்கு ஏற்ற இடமே தொழுவம் எனப்படும்.

பசுக்கள் இருக்குமிடம் ''கோ இல்'' ஆகும். உண்மைதான்.

ஆன்மா ஒடுங்குமிடம் கோவில். இறைவன் வாழுமிடம் கோவில்.

பசுவில் தான் மும்மூர்த்திகளும் முப்பத்தி முக்கோடி தேவர்களும் வசிக்கின்றனர்.

பசுவின் கர்ப்பகாலம் 9 மாதம் 9 நாள். எருமையின் கர்பகாலம் 10 மாதம் 10 நாளாகும்.

பசுவின் பின் பகுதியில் செல்வத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி வசிப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.

அப்பகுதியில் மகாலட்சுமி வசிப்பதாலேயே பசுவுக்கு பூஜை செய்யும் போது பின் பகுதிக்குத்தான் முக்கிய பூஜை நடைபெறுகிறது.

முற்காலத்தில் ராஜாக்கள் அரண்மனைகள் கட்டும் போது உபய தோமுகி என்னும் பூஜை செய்து தான் பின் கட்டடம் கட்டுவார்கள்.

''உபய தோமுகி'' என்பது ஒரு பசு ஆகும். அந்த பசு ஈனும் போது கன்றின் முன்னங்கால்களும் தலையும் தான் முதலில் வரும்.

கன்று போடும் காலத்தில் இவ்வாறு இரு பக்கமும் தலையுடைய பசுவை ''உபய தோமுகி'' என்று சொல்வார்கள்.

அப்பொழுது அந்த பசுவை வலம் வந்து வழிபட வேண்டும்.

மாட்டின் வயிற்றில் இருந்து கன்று வெளிப்படும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமியாக நினைத்து வணங்கியும், ஆசீர்வாதமும் செய்வார்கள்.

அப்பொழுது 3 முறை வலம் வந்து வணங்கி தங்களுக்கு என்ன பிரச்சினைகள் தீரவில்லையோ அது விரைவில் தீர்ந்து நல்ல வழி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டால் பயன் உறுதியாக விரைவில் கிடைக்கும்.

ஈன்ற பசுவிற்கு நஞ்சுக்கொடி விரைவில் விழுவதற்காக மூங்கில் இலை தழைகளை கொடுப்பர்.

நஞ்சுக்கொடி விழுந்து விடும்.

நஞ்சுக் கொடியை தாழை ஓலை, அல்லது பனை ஓலைப் பெட்டியில் வைத்து கட்டி பால் மரங்களில் கட்டித் தொங்கவிடுவார்கள்.

அதன் மூலமாக மாடுகளுக்கு பால் பாக்கியம் பெருகும்.

இதன் நடைமுறை தற்காலம் மாறி வருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News