ஆன்மிக களஞ்சியம்

மன்னனாக பிறந்த சிலந்தி எழுப்பிய கோவில்கள்

Published On 2024-04-08 10:43 GMT   |   Update On 2024-04-08 10:43 GMT
  • நாவல் மரத்தை வடமொழியில் ஜம்பு விருட்சம் என்று கூறுவர்.
  • லிங்கம், நாவல் மரத்தடியில் தோன்றியதால் ஜம்புலிங்கம் என்ற பெயரையும் பெற்றது.

கோச்செங்கோட்சோழன் திருவானைக்கா திருக்கோவிலை மட்டும் எடுக்கவில்லை.

தனக்குத் தீங்கிழைத்த யானையால் ஏறமுடியாத வகையில் எழுபது மாடக்கோவில்களை சிவனுக்கு எடுத்தான்.

இதனைத் திருமங்கை மன்னர்

"இருக்கிலங்கு திருமொழிவா யெண்தோளீசற்கு

எழில்மடம் எழுபது செய்துலக மாண்ட

திருக் குலத்து வளச்சோழன்" என்று பாடுகின்றார்.

லிங்கம், நாவல் மரத்தடியில் தோன்றியதால் ஜம்புலிங்கம் என்ற பெயரையும் பெற்றது.

நாவல் மரத்தை வடமொழியில் ஜம்பு விருட்சம் என்று கூறுவர்.

எனவே கோச்செங்கண்ணன் கட்டிய கோவிலையும் நாவற் கோவில் என்றும் வழங்கினர்.

இத்தலத்திற்கு ஜம்புகேசுவரம் என்ற வடமொழிப்பெயரும் உண்டு.

இந் நாவற் கோவிலிலேயே ஈசன் ஜம்புகேசுவரரும், அகிலாண்ட நாயகியாக அகிலாண்டேசுவரியும் தனித்தனித் திருக்கோவில் கொண்டு திருக்காட்சி அருளுகின்றனர்.

அண்டங்கள் அனைத்தையும் ஈன்ற அன்னையாகிய அகிலாண்டேசுவரியோடு ஈசனையும் கண்குளிரக் கண்டு வழிபட்ட திருத்தொண்டர்கள் பூமாலையும் பாமாலையும் சாத்திப்போற்றுகின்றனர்.

அழகிய அந்தப் பாமாலைகளுள் ஒன்று அகிலாண்டநாயகி மாலை.

Tags:    

Similar News