ஆன்மிக களஞ்சியம்

குறைவான முயற்சி அதிகமான பலன்

Published On 2024-01-28 17:04 IST   |   Update On 2024-01-28 17:04:00 IST
  • அட்சயத் திருதியை தினத்தன்று செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் அழிவற்ற, அளவற்ற பலன்களைத் தரும்.
  • அத்தகைய நாட்களைத்தான் புண்ணிய கால நாட்கள் என்று சாஸ்திரங்களில் வரையறுத்து வைத்துள்ளனர்.

மனிதனுக்காக தரப்பட்ட ஆயுள் மிக, மிக குறைவானது.

எனவே குறைந்த முயற்சியில் அதிகமான பலன்களைப் பெற வேண்டிய நிலையில் மனிதர்கள் உள்ளனர்.

ஒருவர் தம் வாழ்நாளில் அதிகமான பலன்களைப் பெற வேண்டுமானால் உரிய காலத்தை அறிந்து கொண்டு, அந்த சமயத்தில் செயலை செய்ய வேண்டியதுள்ளது.

அத்தகைய நாட்களைத்தான் புண்ணிய கால நாட்கள் என்று சாஸ்திரங்களில் வரையறுத்து வைத்துள்ளனர்.

நாம் ஒவ்வொருவரும் அந்த அரிய புண்ணிய கால நாட்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி தெரிந்து கொண்டால்தான் குறைந்த முயற்சியில் அதிக பலன்களைப் பெற்று, வாழ்வில் வெற்றிகளையும், செல்வங்களையும் குவிக்க முடியும்.

இதற்கு உதவும் புண்ணிய கால நாட்களில் அட்சயத் திருதியை தினம் முக்கியமானது.

அதோடு இணையற்ற மகத்துவமும் கொண்டது.

அட்சயத் திருதியை தினத்தன்று செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் அழிவற்ற, அளவற்ற பலன்களைத் தரும்.

பொதுவாக அட்சயத் திருதியை தினத்தை நாம் எல்லோரும் செல்வத்தை பெருக்கும் தினமாக மட்டுமே கருதுகிறோம்.

மானிடர்களின் லௌகீக வாழ்க்கையில் 90 சதவீதம் பேர் செல்வம் சேர்ப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.

ஆன்மாவை சுத்தப்படுத்தி, முக்தி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் மிக சொற்பமே.

அட்சய திருதியை தினத்தன்று தெய்வங்களை ஆராதனை செய்தால், முக்தி பலனுக்கான படிக்கட்டுக்களை எட்டிப் பிடிக்கலாம்.

Tags:    

Similar News