ஆன்மிக களஞ்சியம்

இளவயது திருமண கோலம்

Published On 2024-01-13 12:37 GMT   |   Update On 2024-01-13 12:37 GMT
  • கோகிலாம்பாள் தலையை குனிந்து மணமகள் போல நானிக்கோனி நிற்கிறார்.
  • மற்றொரு கரம், கோகிலாம்பாளின் நெற்றியில் பொட்டு வைத்தப்படி காணப்படுகிறது.

திருமணஞ்சேரியில் உள்ள கோகிலாம்பாள் உத்வாகநாதர் திருமணக் கோலம் மிக, மிக வித்தியாசமானது.

இது போன்ற சிற்ப அமைப்பை தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் காண இயலாது.

ஆதிகாலத்தில் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

அந்த சிறு வயது திருமணத்தை அப்படியே அச்சு அசலாக பிரதிபலிக்கும் வகையில் அந்த சிற்ப அமைப்பு இருக்கிறது.

இறைவனுக்கு 16 வயது தோற்றம் உள்ளது. இறைவி கோகிலாம்பாளுக்கு 8 வயது கொண்ட தோற்றமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உத்வாகநாதர் மணமகன் போல நிற்கிறார்.

கோகிலாம்பாள் தலையை குனிந்து மணமகள் போல நானிக்கோனி நிற்கிறார்.

உற்சவநாதரின் வலது கை, கோகிலாம்பாள் வலது கையை பற்றியபடி உள்ளது.

மற்றொரு கரம், கோகிலாம்பாளின் நெற்றியில் பொட்டு வைத்தப்படி காணப்படுகிறது.

கோகிலாம்பாளின் பார்வை உத்வாகநாதரின் காலடியை பார்த்தபடி உள்ளது.

அந்த காலத்தில் திருமணமாகி அம்மி மிதிக்கும் வரை கணவன் முகத்தை மணமகள் பார்ப்பது இல்லை.

அந்த மரபை பிரதிபலிக்கும் வகையில் கோகிலாம்பாளின் சிற்ப அமைப்பு உள்ளது.

எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பே வராத சிற்ப அமைப்பு இது.

திருமணஞ்சேரிக்கு செல்லும் போது அந்த சிற்ப அழகை பார்த்து ரசிக்கத் தவறாதீர்கள்.

Tags:    

Similar News