ஆன்மிக களஞ்சியம்

அழகான குழந்தை வேண்டுமா?

Published On 2023-12-03 17:45 IST   |   Update On 2023-12-03 17:45:00 IST
  • சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லப கணபதியைக் காணலாம்.
  • மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு அருளும் விநாயகர் இவர்.

குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லப கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து

நல்ல அழகான குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம்.

சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லப கணபதியைக் காணலாம்.

சிதம்பரம் நகரின் தெற்கு தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னதியை நோக்கியவாறு சக்தி பாலவிநாயகர் உள்ளார்.

சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

நடராஜர் கோவில் இருந்தபோது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர்.

குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அமிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார்.

மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு அருளும் விநாயகர் இவர்.

Tags:    

Similar News