ஆன்மிக களஞ்சியம்

அட்சய திருதியை தினத்தன்று வழிபாடு எப்படி செய்யப்பட வேண்டும்?

Published On 2024-01-28 17:06 IST   |   Update On 2024-01-28 17:06:00 IST
  • அரச மரத்தின் 4 பக்கங்களிலும் தண்ணீரை விட்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • பிறகு அதில் அனைத்து தெய்வங்களும் எழுந்தளி இருப்பதாக கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.

அன்று காலை எழுந்ததும் குளிக்க வேண்டும். ஏரி அல்லது வாய்க்காலில் தலை முழுவதும் நனையுமாறு குளிப்பது நல்லது.

நீராடி முடித்ததும் ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த குடத்து தண்ணீரை எடுத்துச் சென்று அரச மரத்தின் வேரில் விட வேண்டும்.

அரச மரத்தின் 4 பக்கங்களிலும் தண்ணீரை விட்டு சுத்தப்படுத்த வேண்டும்.

பிறகு அதில் அனைத்து தெய்வங்களும் எழுந்தளி இருப்பதாக கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.

குறிப்பாக அரச மரத்தை 7 தடவை சுற்றி வந்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.

அதன் பிறகு பசு மாடுகள் இருக்கும் இடம் சென்று பசு மாட்டுக்கும், பசுங்கன்றுக்கும் கழுத்தில் சொறிந்து கொடுத்து, சாப்பிட உணவு ஏதாவது கொடுக்க வேண்டும்.

இவற்றை செய்து முடித்த பிறகே பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்ரீவிஷ்ணுவை தரிசனம் செய்ய வேண்டும்.

அப்போது ஸ்ரீவிஷ்ணுவை மாதவன் எனும் பெயரில் தியானித்து வழிபாடுகள் செய்தல் வேண்டும்.

அட்சய திருதியை தினத்தன்று இத்தகைய வழிபாட்டை செய்தால் நாம் நினைக்கும் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

Tags:    

Similar News