ஆன்மிக களஞ்சியம்

ஆதித்ய ஹிருதயம்

Published On 2024-02-21 13:51 GMT   |   Update On 2024-02-21 13:51 GMT
  • அவரே மருத்துவர் ஆவார், அவரே மனு, வாயு, மற்றும் அக்னி,
  • பருவங்களின் காரணம் அவரே, உலகை உய்வித்து வைத்திருக்கின்ற ஒளியின் இருப்பிடம் அவரே

இனி இந்த சூரிய தேவனுக்குரிய மிக பலம் வாய்ந்த துதியான ஆதித்ய ஹ்ருதயம் எவ்வாறு ராம பிரானுக்கு கும்ப முனி என்று அழைக்கப்படும் அகத்திய முனிவரால் எப்படி உபதேசிக்கப்பட்டது என்பதைப் பார்ப்போமா?

யுத்த களத்திலே ராவணனை கடைசியாக எப்படி அழிப்பது என்று யோசித்துக் கொண்டு ராம பெருமாள் என்ற போது,

பல தேவர்களுடனும், கந்தவர்களுடனும், ரிஷகளுடனும் சேர்ந்து ராம ராவண யுத்தத்தை கவனித்துக் கொண்டிருந்த

பெரும் சிறப்பு வாய்ந்த கும்ப முனி என்று அழைக்கப்படுபவரும், அம்மையப்பரின் திருக்கல்யாணத்தின் போது

வடக்கு திசை தாழ்ந்து தெற்கு உயர்ந்த போது உலகைச் சமப்படுத்த வந்தவருமான அகஸ்திய முனிவர், ராமனிடம் வந்து பேசத் தொடங்கினார்.

"பெரும் தோள்வலி படைத்தவனே, ராமா! என்றுமே அழியாத ஒரு ரகசியத்தை உனக்கு உரைக்கின்றேன்.

கேள், நான் கூறப்போவது ஆதித்ய ஹ்ருதயம் என்கிற துதி. இது சாஸ்வதமானது, புனிதமானது,

அழிவற்றது, எல்லா பாவங்களையும், ஒழிக்க வல்லது, எல்லா எதிரிகளையும் அழிக்க வல்லது, மன குழப்பத்தையும்,

துன்பத்தையும், வேரோடு அறுக்க வல்லது, ஆயுளை வளர்க்க வல்லது, பெறும் சிறப்பு வாய்ந்தது.

தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவனும், உலகுக்கே ஒளி தருபவனும், தினம் தவறாமல்

தோன்றுபவனுமான உனது இஷ்வாகு குல தெய்வமான சூரியனைப் பற்றிய துதி இது.

உலகை மட்டுமல்லாமல் தேவர்களையும் கூட வாழ் விப்பவர் சூரிய பகவான், அவரே பிரம்மா, விஷ்ணு,

சிவபெருமான், அவரே கந்தன், ப்ரஜாபதி, இந்திரன், குபேரன், அவரே காலன், யமன், சோமன், வருணன், அவரே அனைத்து பித்ருக்களும் ஆவார்.

அவரே அஷ்ட வஸக்கள் ஆவாதர், அவரே மருத்துவர் ஆவார், அவரே மனு, வாயு, மற்றும் அக்னி,

பருவங்களின் காரணம் அவரே, உலகை உய்வித்து வைத்திருக்கின்ற ஒளியின் இருப்பிடம் அவரே,

உலகின் மூச்சுக் காற்று அவரே, என்று தொடங்கிய சூரிய பகவானின் பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டது.

Tags:    

Similar News