ஆன்மிக களஞ்சியம்

ஆடி விரதங்கள் மற்றும் வழிபாடுகள்

Published On 2023-11-04 12:12 GMT   |   Update On 2023-11-04 12:12 GMT
  • ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும்.
  • இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும்.

ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும்.

ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும்.

நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப் பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம்.

இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும்.

அதேபோல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும்;

குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

மேலும், ஆடி மாதப் பிறப்பில், ஆடிப்பால் தயாரிப்பார்கள்.

புதிதாக திருமணம் ஆன மணமகனை அழைத்து, ஆடியில் ஆடிப்பால் கொடுப்பது வழக்கம்.

Tags:    

Similar News