ஆன்மிக களஞ்சியம்

7 வாசல் ஆலயம்

Published On 2024-02-19 11:40 GMT   |   Update On 2024-02-19 11:40 GMT
  • பெருமாள் வீற்றிருக்கும் வைகுண்டம் 7 வாசல்களை கொண்டது.
  • அகழியுடன் காணப்படும் அந்த பிரகாரத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களிலும் சிற்ப கலையை கண்டு ரசிக்கலாம்.

பெருமாள் வீற்றிருக்கும் வைகுண்டம் 7 வாசல்களை கொண்டது.

அதை சப்த துவாரம் என்று சொல்வார்கள். அதே அமைப்பு நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்திலும் அமைந்துள்ளது.

இந்த தலத்தின் கருவறைக்கு முன்பு 7 நுழைவாயில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வாயிலாக கடந்து சென்று பெருமாளை தரிசித்தால் வைகுண்டத்துக்கு சென்றது போன்ற பலனை பெற முடியும் என்பது ஐதீகம்.

அதுபோன்று இந்த தலம் பஞ்ச பிரகாரங்களை கொண்டது. அதாவது 5 பிரகாரங்கள் இந்த தலத்தில் அமைந்துள்ளன.

கருவறையை சுற்றி முதல் பிரகாரம் அமைந்துள்ளது.

அகழியுடன் காணப்படும் அந்த பிரகாரத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களிலும் சிற்ப கலையை கண்டு ரசிக்கலாம்.

விஜயநகர பேரரசின் கட்டிடக்கலை நுணுக்கங்களை அங்குள்ள ஒவ்வொரு தூண்களிலும் பக்தர்கள் பார்க்க முடியும்.

முதல் பிரகாரத்தை சுற்றி வரும் போது விஷ்ணு, துர்க்கை, பிரம்மா, விஷ்வசேனா ஆகியோரது உருவங்களை தரிசிக்கலாம்.

கருவறைக்கு நேர் பின்புறம் லட்சுமி வராக சுவாமி, வேணுகோபால சுவாமி, லட்சுமி நாராயண சுவாமி, ஹயக்கிரீவர் சுவாமி ஆகிய 4 பேரின் பிரம்மாண்ட விக்கிரகங்கள் வரிசையாக இருக்கின்றன.

கருவறை பின்புறம் பொதுவாக பெருமாளின் அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்த தலத்தில் லட்சுமி பூவராக சுவாமி இடம் பெற்றுள்ளார்.

கருவறையின் அடுத்த பகுதியில் வீணா தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோரது விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2வது பிரகாரம் மிக அகன்ற வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

அந்த கருவறையின் ஒரு பகுதியில் பக்த ஆஞ்சநேயரும், மற்றொரு பகுதியில் வேதவல்லி தாயாரும் இருக்கிறார்கள்.

ராமர், லட்சுமணர், வீர ஆஞ்சநேயர் ஆகியோரையும் அந்த பிரகாரத்தில் தரிசிக்கலாம்.

3வது பிரகாரம் நந்தவனம். 4வது பிரகாரம் மாடவீதியாக உள்ளது. 5வது பிரகாரம் கிராமத்தை உள்ளடக்கியது.

Tags:    

Similar News