40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் ஆதி அத்தி வரதர்
- இக்குளத்தில் நீர் எப்போதும் வற்றுவதில்லை.
- அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.
இக்கோவிலின் மிகச்சிறப்பாக போற்றப்படுவது ஆதி அத்தி வரதர்.
வரதராஜ பெருமாள் ஆலயத்தின் உள்ளே இருக்கும் அனந்தசரஸ் புனித குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
ஏனெனில் அவர் பக்தர்களின் கண்ணுக்குப் புலப்படாது வீற்றிருப்பது அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில்.
இக்கோவிலின் நூறுகால் மண்டபத்தின் அருகில் நீருக்கு அடியில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அருள்பாலித்து வருகிறார்.
இக்குளத்தில் நீர் எப்போதும் வற்றுவதில்லை.
அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.
பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து 24 நாட்களுக்கு சயன மற்றும் 24 நாட்களுக்கு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார்.
பேரருளாளன் அத்தி வரதரை வசந்த மண்டபத்தில் 48 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர்.
தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனிக்கச் சென்று விடுவார்.