search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வடக்குமாசி வீதி கம்பத்தடி கிருஷ்ணர் கோவில்
    X

    வடக்குமாசி வீதி கம்பத்தடி கிருஷ்ணர் கோவில்

    • 100 ஆண்டுகளுக்கு முன், ஆயிரம் வீட்டு யாதவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள்.
    • இரண்டு கரங்களிலும் வெண்ணை ஏந்திய கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீ நவந்தகிருஷ்ணன்.

    மதுரையில் இரண்டாவது கிருஷ்ணர் குடியிருப்பது ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் உள்ள மாசி வீதிகளில்,

    வடக்கு மாசி வீதியின் மையப் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணர் ஆலயமாகும்.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், ஆயிரம் வீட்டு யாதவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள்.

    முழுக்க முழுக்க கல் கட்டுமானமாக கோவில் அமைந்திருப்பது சிறப்பு.

    மீனாட்சியம்மன் கோவிலின் வடக்கு கோபுரத்தின் திசையில் உள்ளதால் வடக்கு கிருஷ்ணன் கோவில் என்றும்,

    ஆரம்ப காலத்தில் கம்பத்தின் அடியில் கிருஷ்ணன் வீற்றிருந்ததால், கம்பத்தடி கிருஷ்ணன் கோவில் என்றும் அழைக்கிறார்கள்.

    இரண்டு கரங்களிலும் வெண்ணை ஏந்திய கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீ நவந்தகிருஷ்ணன்.

    பாமா, ருக்மணி தேவியரும் உடனிருக்கிறார்கள்.

    இவருக்கு ஒரு சிறப்பு உண்டு.

    குருவாயூரப்பன் கோவிலுக்குச் சென்று குழந்தைக்கு சோறூட்டுவதாக வேண்டிக் கொண்டு (அன்னப்ரசன்னம்),

    அங்கு செல்ல இயலாதவர்கள் இந்த ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சந்நிதியில் அந்த வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

    புத்திரதோஷம் உள்ளவர்கள் இந்த கிருஷ்ணனை மனதாரப் பிரார்த்தித்து,

    அவருக்கு கொலுசு அணிவிப்பதாகவும், கோவிலில் தொட்டில் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டால்,

    விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தமிழகத்திலேயே மிக உயரமான (சுமார் 38 அடி உயரம்) வழுக்கு மரம் அமைத்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெறுகிறது.

    9ம் நாளன்று 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க, முளைப்பாரி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    அன்று ஆசியாவிலேயே மிள நீளமானது என்ற சிறப்புக்குரிய இந்தக் கோவிலின் புதிய பல்லக்கில் உலா வருவார் கிருஷ்ணர்.

    15 நாட்கள் கிருஷ்ணா ஜெயந்தி விழா இத்தலத்தில் நடத்தப்படுகிறது.

    Next Story
    ×