search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவாடுதுறை தலத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் புதைந்து கிடந்த திருமந்திரம்
    X

    திருவாடுதுறை தலத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் புதைந்து கிடந்த திருமந்திரம்

    • திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை.
    • அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார்.

    திருமூலரின் காலம் ஏழாயிரம் வருடங்களுக்கு முந்தியது (கி.மு.5000) என்ற போதும், திருமந்திரத்தின் காலம் தற்கால ஏழாம் நூற்றாண்டு (கி.பி.700) என்று பல வரலாற்று வல்லுநர்களால் கருதப்படுகின்றது. இதற்குக் காரணம் உள்ளது.

    திருமூலர் திருமந்திரம் எழுதி முடித்தவுடன் அதை வெளியிடவில்லை.

    யாரும் அறியாதவாறு, தாம் யோக நிலையில் அமர்ந்திருந்த திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் ஆலயத்தின் கொடி மரத்தின் அடியில்தான் எழுதிய திருமந்திரம் அடங்கிய ஓலைச் சுவடிகளைப் புதைத்து வைத்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் சென்று தனது குருவாகிய நந்தியிடம் தஞ்சம் அடைந்து தில்லை நாதனுடன் கலந்து விட்டார்.

    அதன் பிறகு நாலாயிரம் வருடங்கள் கழித்து, (திருமூலர் திருமந்திரம் எழுத எடுத்துக் கொண்டது மூவாயிரம் வருடங்கள்), தற்கால ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.700), அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சைவ சமயக் குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர்களில் ஒருவருமான, திருஞான சம்பந்தப் பெருமான் உதித்தார்.

    அவர் தென்னாட்டிலுள்ள சைவ ஆலயங்கள் அனைத்தையும் சென்று வழிபட்டு அதில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பாடிச் சென்ற காலங்களில், திருவாவடுதுறை திருத்தலத்திற்கும் வந்திருந்தார்.

    அப்போது கோவிலுக்குள் நுழைந்தவுடன் இறைவனின் திருவருளால் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் அற்புதமான தமிழ் வாசனை அவரை வந்தடைய, அதனால் ஈர்க்ப்பட்டுத் தன்னுடன் வந்தவர்களிடம், இங்கே அருமையான தமிழ் வாசனை வருகின்றதே. என்ன என்று பாருங்கள் என்று கூறி மண்ணைத் தோண்டச் செய்தார்.

    அங்கே திருமூலர் புதைத்து வைத்திருந்த திருமந்திர ஓலைச் சுவடிகளைக் கண்டு எடுத்தார்.

    அவற்றை படித்து உணர்ந்து அதன் அருமை பெருமைகளை உலகோர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று அதை வெளியிட்டு அனைவருக்கும் அருளிச் செய்தார்.

    வேறு சில சித்தர் பாடல்களில் இவரின் வாழ்வு பற்றிய மாறுபட்ட குறிப்புகளும் உள்ளன.

    Next Story
    ×