search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பவுர்ணமியில் செய்ய வேண்டிய தானங்கள்
    X

    பவுர்ணமியில் செய்ய வேண்டிய தானங்கள்

    • தானத்தில் பல வகை உள்ளது. எந்த தானத்தை எப்போது செய்ய வேண்டும் என்ற ஐதீகம் இருக்கிறது.
    • ஓராண்டில் வரும் 12 பவுர்ணமிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுக்க வேண்டும்.

    கண்ணாடி தானம்

    பவுர்ணமி தினம் மிக, மிக சக்திவாய்ந்தது என்பதால் தான் அன்று விரதம் இருக்கவும், சிறப்பு பூஜைகள் செய்யவும் பெரும்பாலானவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்ககள்.

    ஆனால் பவுர்ணமியன்று பூஜை, வழிபாடுகளுடன் தானம் செய்தால் தான் 100 சதவீத புண்ணியம் கிடைக்கும்.

    தானத்தில் பல வகை உள்ளது. எந்த தானத்தை எப்போது செய்ய வேண்டும் என்ற ஐதீகம் இருக்கிறது.

    அந்த வகையில் பவுர்ணமி நாட்களில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுப்பது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.

    ஏதோ ஒரு பவுர்ணமிக்கு மட்டும் கொடுத்தால் போதாது.

    ஓராண்டில் வரும் 12 பவுர்ணமிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுக்க வேண்டும்.

    ஆடி அல்லது மாசி மாதம் கண்ணாடி தானம் கொடுப்பதை தொடங்கலாம்.

    இந்த தானத்தை வெற்றிலை, பாக்கு, பழம், தட்சணை, துளசி தனம் வைத்து தானம் கொடுக்க வேண்டும்.

    இந்த தானம் கொடுப்பதின் நோக்கம், கண்ணாடியில் நமது முகம் தெரியும்.

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

    கண்ணாடியில் தெரியும் நமது முகம் அழகாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நமது அகத்தை அதாவது மனதை அழகாக வைத்து கொள்ள வேண்டும்.

    இப்படியாக அகத்தின் அழகை முகத்தில் காட்டும் கண்ணாடியை தானம் கொடுப்பவர்களும், தானம் வாங்குபவர்களும், மனதை நிர்மலமாகவும், அதாவது தூய்மையாகவும், அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி கொடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×