search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நாகலாபுரம் ஆலயம் 25
    X

    நாகலாபுரம் ஆலயம் 25

    • நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
    • 12 ராசிக்காரர்களில் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த தலம் மிக உகந்த தலமாக கருதப்படுகிறது.

    1. நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    2.நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்துக்கு செல்பவர்களை வரவேற்கும் வகையில் திருப்பதி சாலையில் இருந்து பிரியும் பகுதியில் மிகப்பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு கட்டி உள்ளனர். அந்த வழியாக சென்றால் மிக எளிதாக ஆலயத்துக்குள் செல்லலாம்.

    3. வேதநாராயண சுவாமி ஆலயத்தில் கருவறை சுவர்களில் ஏராளமான கல்வெட்டுகளும், சிற்பங்களும் நிறைந்து உள்ளன.

    4. இந்த ஆலயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய கோட்டைக்கு மத்தியில் கட்டப்பட்டு இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அந்த கோட்டையின் சில பகுதிகள் இப்போதும் நாகலாபுரம் ஊரில் ஆங்காங்கே காணப்படுகின்றன.

    5. கருவறையை சுற்றி மிகப்பெரிய அகழி அமைத்து உள்ளனர். அந்த அகழி பகுதியிலும் ஏராளமான அரிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

    6. திருப்பதி ஆலயத்தில் நடப்பது போன்றே இந்த தலத்திலும் அனைத்து வகை பூஜைகளும் பெருமாளுக்கு நடத்தப்படுகின்றன.

    7. இந்த தலத்தில் திருப்பதியை போன்றே தினமும் கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் கல்யாண உற்சவத்தில் பங்கேற்கலாம்.

    8. ஆகம விதிகளின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன. இதனால் நவக்கிரகங்களில் எந்த கிரகத்தில் தோஷம் இருந்தாலும் இந்த தலத்தில் வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.

    9. இந்த ஆலயத்தில் பல தடவை அகழாய்வு செய்த போது அரிய சிலைகள் கிடைத்து உள்ளன. எனவே இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய மிக பழமையான ஆலயம் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

    10. வேதநாராயண சுவாமி ஆலயத்துக்கு சொந்தமாக ஏராளமான நிலம் இருந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக பல நிலங்கள் கை நழுவி விட்டன.

    11. 1967ம் ஆண்டு இந்த ஆலயத்தை அரசு கையகப்படுத்தி நடத்தி வருகிறது.

    12. இந்த ஆலயத்தின் தூண்களில் காணப்படும் கல்வெட்டுகளில் 99 சதவீதம் கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளாக அமைந்துள்ளன.

    13. வைகுண்ட ஏகாதசி, தை மாத பிறப்பு, ரதசப்தமி ஆகியவை இந்த தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும். சமீப காலமாக தெலுங்கு வருடப்பிறப்பும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    14. திருப்பதி ஆலயத்தின் நேரடி கட்டுப்பாட்டில் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் இயங்கி வருகிறது.

    15. சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், சுருட்டப்பள்ளியில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    16. சென்னையில் இருந்து செல்பவர்கள் இந்த ஆலயத்தை தரிசித்து விட்டு திரும்பும் போது சுருட்டப்பள்ளி, பெரியபாளையம், சிறுவாபுரி, ஆண்டார்குப்பம் ஆகிய ஆலயங்களில் தரிசித்துவிட்டு வரலாம்.

    17. பித்ரு தோஷம், சர்ப்ப தோஷங்களுக்கு இந்த தலம் மிகவும் சிறந்த பரிகார தலமாகும்.

    18. 12 ராசிக்காரர்களில் மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த தலம் மிக உகந்த தலமாக கருதப்படுகிறது.

    19. இந்த ஆலயத்து பெருமாளுக்கு மத்ஸ்ய நாராயண பெருமாள் என்றும் ஒரு பெயர் உண்டு.

    20. நாகலாபுரத்தில் இருந்து திருப்பதி சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து செல்பவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டு கொண்டால் இரு ஆலயங்களிலும் தரிசனம் செய்து விட்டு வரலாம்.

    21. நாகலாபுரத்தில் நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது. நேரமிருப்பவர்கள் அங்கும் சென்று வரும் வகையில் யாத்திரையை அமைத்துக்கொள்ளலாம்.

    22. இந்த தலத்தில் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. சித்ரா பவுர்ணமியை மையமாக கொண்டு நடக்கும் இந்த திருவிழா 9 நாட்கள் நடத்தப்படும்.

    23. மீன் அவதாரம் எடுத்ததால் இந்த தலத்தில் மச்ச ஜெயந்தி மிக உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்த திருவிழா நடைபெறும்.

    24. வைகாசி மாதம் இந்த தலத்தில் நடக்கும் புஷ்ப யாகம் மிக பிரச்சித்தி பெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த புஷ்ப யாகத்தில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள்.

    25. கார்த்திகை மாதம் இந்த தலத்தில் பவித்ர உற்சவம் நடைபெறும்.

    Next Story
    ×