என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தசம ஸ்காந்தம் படித்தால் ஆண் குழந்தை பிறக்கும்
    X

    தசம ஸ்காந்தம் படித்தால் ஆண் குழந்தை பிறக்கும்

    • கிராமங்களில் மாலை வேளையில் தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
    • தசம ஸ்காந்தம் படித்தால், பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு பக்தி, யுக்தி,

    அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சத்புத்திர பாக்கியத்தை அருள வேண்டும் என்று

    அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம்,

    புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சத்புத்திர பாக்ய யோகத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

    தசம ஸ்காந்தம் படித்தால் ஆண் குழந்தை பிறக்கும்

    பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க,

    குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும்.

    இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

    கிராமங்களில் மாலை வேளையில் தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வார்கள்.

    வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்கு சென்று

    இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.

    கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால்,

    அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.

    Next Story
    ×