search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அண்ணாசாமியின் வயிறுவலி நீங்க சாது கூறிய வழி
    X

    அண்ணாசாமியின் வயிறுவலி நீங்க சாது கூறிய வழி

    • எவ்வளவோ மருத்துவம் செய்தும் வயிற்றுவலி நீங்கவில்லை.
    • தல யாத்திரை வந்த சாது ஒருவரை, வியாக்கிரபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்ற போது கண்டார்.

    உற்ற வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு புதல்வர்களை பெற்ற இவர், வயிற்று வலி நோயால் மிகவும் துன்பமுற்று வருந்தி வந்தார்.

    எவ்வளவோ மருத்துவம் செய்தும் வயிற்றுவலி நீங்கவில்லை.

    ஒரு நாள் பழனியில் இருந்து தல யாத்திரையாக வந்த சாது ஒருவரை, வியாக்கிரபுரீஸ்வரர் கோவிலுக்குச் சென்ற போது கண்டார்.

    மிகவும் அருள்நோக்கு உடையவராகக் காணப்பட்ட அச்சாதுவை வணங்கி தமது குறையை சொல்லி, அது தீரும் வழி ஏதேனும் ஒன்றைக் கூறுமாறு வேண்டிக் கேட்டார் அண்ணாசாமி நாயக்கர்.

    அதற்கு அந்த சாது, ''வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை'' என்று கூறி,

    ''நீ கிருத்திகை தோறும் தவறாது திருப்போரூர் சென்று வழிபட்டு வா, திருத்தணிகை நாதனுக்கு ஏதேனும் புது முறையான காணிக்கை செலுத்து, முடிந்த போது பழனிக்குப் போய் தரிசனம் செய், உன் வயிற்று வலி தீரும்'' என்று அருள் உரை கூறினார்.

    அன்று முதல் அண்ணாசாமி நாயக்கர் முருக பக்தியில் தலை நின்றவராகி, அடுத்த கிருத்திகை முதல் திருப்போரூருக்கு தவறாது சென்று வழிபட்டார்.

    Next Story
    ×