search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிதான் முக்கியம், ரன் முக்கியமல்ல என்று கோலி சொன்னால், அது பொய்- ஆண்டர்சன்
    X

    வெற்றிதான் முக்கியம், ரன் முக்கியமல்ல என்று கோலி சொன்னால், அது பொய்- ஆண்டர்சன்

    தான் ரன் அடிக்காவிடிலும் இந்தியா வெற்றி பெற்றால் போதும் என்று கோலி சொன்னால், அது பொய் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஆண்டர்சன் கூறியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொணட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இதில் விராட் கோலி எப்படி விளையாடுகிறார்? என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அப்போது 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். விராட் கோலியின் மிகவும் மோசமான டெஸ்ட் தொடர் இதுவாகும்.

    அதன்பின் இங்கிலாந்து இந்தியா வந்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அப்போது இந்தியா தொடரை 4-0 என வென்றது. இந்த தொடரில் விராட் கோலி 655 ரன்கள் குவித்தார்.

    இங்கிலாந்து தொடர் குறித்து விராட் கோலி பேசுகையில், இந்திய அணி வெற்றி பெறுகிறதா? என்பதுதான் முக்கியம். நான் ரன் அடிக்கிறேனா, இல்லையா என்பது பெரிய விஷயம் இல்லை என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் விராட் கோலியின் ரன் முக்கியமில்லை என்று அவர் கூறினால், அது பொய் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெற்றில் பெற்றால் அது பெரிய விஷயம்தான். விராட் அவருடைய அணிக்காக ரன்கள் குவிக்க ஆவலாக இருப்பார். உலசின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், அணியின் கேப்டனும் ஆன அவரிடம் இந்தியா அணி அதை எதிர்பார்க்கும்.



    இப்போதைய காலக்கட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் மேட்ச் ஃபூட்டேஜ்ஜில் இருந்து மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. அவர்களுடைய கடந்த கால அனுபவத்தில் இருந்தும் கற்றுக் கொள்கிறார்கள். ஆகவே, நான் விராட் கோலியின் திறமையை 2014 தொடரில் இருந்தும் என்னால் கற்றுக்கொள்ள முடியும்.

    விராட் கோலி கடினமாக பயிற்சி மேற்கொண்டிப்பார் என்பது எனக்கு உறுதியாக தெரியும். இங்கிலாந்து எதிரான தொடர் விராட் கோலிக்கும் எனக்கும் இடையிலான போட்டியல்ல. மீதமுள்ள இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கும்தான். இது மிகவும் அற்புதமான ஒன்று’’ என்றார்.
    Next Story
    ×