என் மலர்
ஆன்மிகம்

எப்போதும் அல்லாஹ்வே துணை
நபிகளார் வாழ்வில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட 'நம் நாயகம்' நூலில் இருந்து.
ஒருமுறை நாயகம் (ஸல்) பயணக் களைப்பில அசந்துபோயி ஒரு மரத்தடியில தூங்கிட்டாங்க.
அப்ப எதிரிப்படையைச் சேர்ந்த ‘கவ்ராத்’ங்கறவரு நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்தவுடன் ‘இதுதான் நமக்குக் கிடைச்ச வாய்ப்பு’ன்னு தன் கையிலிருந்த வாளோடு நாயகம் (ஸல்) அவர்களை நெருங்கினாரு.
நாயகம் கண் விழிச்சுப் பார்க்கிறாங்க. கவ்ராத் “உங்களை யார் இப்ப காப்பாத்துவாங்க?”ன்னு சொல்லியபடியே நாயகத்தைக் கொல்ல வராரு…
உடனே நாயகம் (ஸல்) அவர்கள் உறுதியான குரலில் “என்னைப் படைச்ச இறைவன் நிச்சயம் என்னைக் காப்பாத்துவான்”னு சொல்றாங்க.
அவங்க அவ்வளவு உறுதியாச் சொன்ன விதத்தைப் பார்த்து கவ்ராத்துக்கு கை நடுங்கிடுச்சு… கவ்ராத் கையிலிருந்த வாள் அவரையறியாமலே கீழே விழுந்துடுச்சு.
நாயகம் (ஸல்) உடனே கீழே விழுந்த அந்த வாளை எடுத்து “இப்ப உங்களை யாரு காப்பாத்துவாங்க?”ன்னு கவ்ராத்தைப் பார்த்துக் கேட்கிறாங்க.
உடனே கவ்ராத் பயந்தே போயிட்டாரு… கையெல்லாம் நடுநடுங்குது… முகமெல்லாம் வேர்த்து, பதறியபடியே “என்னைக் காப்பாத்த யாருமே இல்லை… நாயகமே நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்”ன்னு கெஞ்சியிருக்காரு.
அதுக்கு நாயகம் (ஸல்) அமைதியா “அப்படிச் சொல்லாதீங்க நண்பரே! உங்களைக் காப்பாத்தறதுக்கும் இறைவன் இருக்கான்”னு சொல்லி அந்த வாளை கவ்ராத்தோட கையிலேயே திருப்பிக் கொடுத்திடுறாங்க.
இந்தச் சின்ன சம்பவத்தின் மூலமா நமக்கு என்ன தெரியுதுன்னா… நாயகம் (ஸல்) எந்த ஒரு கஷ்டத்திலயும் அல்லாஹ்வை மறக்கவே இல்லை…
தனக்கு ஆபத்து வந்தவுடனே பயந்து ஓடாமலும், தன்னைக் காப்பாத்துன்னு எதிரிகிட்ட கேட்காமலும், நம்மைப் படைச்ச இறைவன் நம்மைக் காப்பாத்துவான்னு நம்பறவங்களுக்கு இறைவன் எப்பவும் துணையாக இருப்பான்ங்கிறது இதுல இருந்து நமக்குப் புரியுது.
எவ்வளவு பெரிய ஆபத்தாய் இருந்தாலும் உறுதியான எண்ணத்தோடு அல்லாஹ்வை நினைத்தால், அல்லாஹுத்தஆலா நமக்கு அதை லேசாக்கித் தருவான்.
- ஜெஸிலா பானு.

Next Story