என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • 'D55' படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
    • 'D55' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்

    தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்திற்கு `D55' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி `D55' படத்தை பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும், 'D55' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டது.

    இந்நிலையில், 'D55' படத்தின் சாய் பல்லவி நடிக்கிறார் என்று படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது
    • நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றைடைய வேண்டும்

    ஜனவரி 29, 2026 அன்று, தமிழ்நாடு அரசு 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளை அறிவித்தது. இதில் நடிகர்கள் தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி, கார்த்தி மற்றும் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜோதிகா, சாய் பல்லவி உள்ளிட்டோர் பல்வேறு பிரிவுகளில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இசை, இயக்கம் என அனைத்துப் பிரிவுகளிலும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசின் இந்த விருது தேர்வுகள் குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்துவருகிறது. பல நல்லப் படங்களுக்கு விருது வழங்கப்படாமல், அரசிற்கு ஆதரவளிப்போருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.

    இயக்குநரும், நடிகருமான சேரனும் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள சேரன், 

    "பெண்களுக்கு இலவச பஸ்.. வறுமையில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவித்தொகை.. திருமணத்திற்கு அரசு உதவி.. இதையெல்லாம் செய்யும் அரசு .. பெரும் பணம் இல்லாத குடும்பங்களில் கடன் படாமல் சிக்கனமாக எப்படி திருமணம் நடத்தப்பட வேண்டும்.. வாழ்க்கைக்கான சேமிப்பாக எப்படி அதை மாற்றலாம் என கருத்தோடு விளிம்புநிலை மக்களுக்கான படமாக உருவாக்கப்பட்டிருந்த "திருமணம்" திரைப்படம் தேர்வுகுழுவினரால் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மையை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுகிறது..

    அரசிற்கு வரி கட்டி வாக்களித்து நாங்களும் இந்த சமூகத்தின் வாக்காளர்கள் என்ற உரிமையில் எனக்கு கேட்கும் உரிமை இருக்கிறது. இனி எவருக்கும் இதுபோல் நடக்க கூடாது.. நேர்மையான முறையில் பாரபட்சமின்றி யாரும் ஒதுக்கப்படாமல் விருதுகள் சென்றைடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.. அரசுகள் மாறலாம்.. அரசின் நிலைப்பாடு என்றும் பாராபட்சமாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    அனோமி படம் திரையரங்குகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் பாவனா. பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான 'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார்.

    'நம்மல்' திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி' படத்தில் அவர் புது கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி இயக்கியுள்ளார்.

    வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் தனித்துவமான கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதையை அமைந்துள்ளார். படத்தில் பாவனா, 'சாரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும் நடிகர் ரஹ்மான், இந்தப் படத்தில் விசாரணை அதிகாரியாக மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்புகிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது.

    இந்தப் படத்தை டி சீரிஸ் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் வழங்க குமார் மங்கத் பாதக் மற்றும் அபிஷேக் பாதக் தயாரித்துள்ளனர்.

    'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மர்மம், உணர்ச்சி, மற்றும் புத்திசாலித்தனமான விசாரணை ஆகியவற்றின் சங்கமமாக, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது.

    இப்படம் திரையரங்குகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    • 'சீதா ராமம்' படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார்
    • 'சீதா ராமம்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். மேலும், ராஷ்மிகா மந்தனா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    இந்நிலையில், துல்கர் சல்மானும் மிருணாள் தாக்கூரும் இணைந்து புதிய ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான இப்பாடலை அவரது மகன் ஏ.ஆர். அமீன் பாடியுள்ளார்.

    • சிவகார்த்திகேயனின் 25வது படம் பராசக்தி.
    • ஜன.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில், பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரியில் வெளியான படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார்.  பேசில் ஜோசப், ராணா டக்குபதி, சேத்தன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

    மொழி திணிப்பை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கும் மேல் வசூலானது. இந்நிலையில் பராசக்தி படம் வரும் பிப்.7ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • டிரோன் ஷோவிற்காக 250 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
    • வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர்.

    தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான தருணமாக, 'வித் லவ் (With Love)' திரைப்பட குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தனர்.

    ஜியோன் ஃபிலிம்ஸ் (Zion Films) சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் (MRP Entertainment) இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், `டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, "வித் லவ்" திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பலமுனைகளில் புதுமையான விளம்பரங்களை செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாகவே சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ நடைபெற்றது. தமிழ் சினிமாவில், திரைப்பட விளம்பரத்திற்காக டிரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    வானில் மின்னும் எழுத்துகளாக 'With Love' தோன்றிய தருணம், காதலின் உணர்வையும், இளமை துள்ளலையும் ஒருசேர வெளிப்படுத்தியது. இந்த தனித்துவமான நிகழ்வில், 'வித் லவ்' படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது.

    சமூக வலைதளங்களில் இந்த டிரோன் ஷோ வீடியோக்கள் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்.

    • டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார்.

    டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மேலும், கடந்தாண்டு வெளியாகி பட்டையை கிளப்பிய லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாப்பாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார் . லோகா 2 படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

    தற்போது டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் 'பள்ளிச்சட்டம்பி' படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார்.

    இந்நிலையில், கயோடு லோகரின் பர்ஸ்ட் ஃலுக் போஸ்டரை பள்ளிச்சட்டம்பி படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகிறது.

    • படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
    • 'D55' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு.

    தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்திற்கு `D55' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி `D55' படத்தை பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மேலும், 'D55' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டது. இந்நிலையில், 'D55' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீலீலா கதாபாத்திரம் பற்றிய அறிவிப்பு இன்று மாைலை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

    • படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது.
    • துருவ நட்சத்திரம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "துருவ நட்சத்திரம்." இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டு இதுவரை ரிலீஸ் ஆகாமலேயே உள்ளது. நிதி பிரச்சினைகள் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருகிறது.

    இந்த நிலையில், துருவ நட்சத்திரம் ரிலீஸ் குறித்த புதிய தகவலை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் தனது 25 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் இசை கச்சேரியில் கலந்து கொண்ட கவுதம் மேனன் ரசிகர்களிடம் "துருவ நட்சத்திரம்" படத்தின் புதிய அப்டேட் கொடுத்தார்.

    இது குறித்து பேசிய அவர், ``நிதி சிக்கல்கள் காரணமாக `துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தாமதமானது. அந்த பிரச்னைகளை சமாளிக்க சில ஆண்டுகள் கழிந்துவிட்டன. தற்போது கடைசி கட்ட சவால்களை சமாளித்து வருகிறேன். படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்புகிறேன். இப்படம் வெளியாக வேண்டும் என்பதால், வேறு படங்களை இயக்கவில்லை,'' என்றார்.

    துருவ நட்சத்திரம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், படத்தின் டீசர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. எனினும், படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தாமதமாவது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

    • சமீபத்திய ஆல்பம் மேஹெம் (Mayhem) இந்த விருதை பெற்றுள்ளது.
    • இங்கே நிற்பது எனக்கு மிகப் பெரிய மரியாதை.

    பாப் இசை உலகின் முன்னணி நட்சத்திரம் லேடி காகா. இவரது பாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரபலம். இந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் 'சிறந்த பாப் வோக்கல் ஆல்பம்' என்ற பிரிவில் லேடி காகா விருது வென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவரது சமீபத்திய ஆல்பம் மேஹெம் (Mayhem) இந்த விருதை பெற்றுள்ளது.

    இந்தப் பிரிவில் ஜஸ்டின் பீபரின் 'Swag', மைலி சைரஸின் 'Something Beautiful', டெடி ஸ்விம்ஸின் 'I've Tried Everything but Therapy (Part 2)' மற்றும் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற சப்ரினா கார்பெண்டரின் 'Man's Best Friend' ஆகிய படைப்புகளைத் தாண்டி லேடி காகா இந்த விருதை கைப்பற்றினார்.

    விருதை பெற்ற பின் மேடையில் பேசிய லேடி காகா, "இங்கே நிற்பது எனக்கு மிகப் பெரிய மரியாதை. நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே இசை செய்து வருகிறேன். இங்கு வந்த ஒவ்வொரு முறையும், இன்னும் கனவா நிஜமா என்று நான் என்னை தட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்குள்ள அனைவரையும் நான் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறேன். முதலில் என் துணைவர் மைக்கேலுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த ஆல்பத்திற்காக முழு ஆண்டும் என்னுடன் உழைத்தீர்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்," என்று அவர் கூறினார்.

    "இசைத்துறையில் உள்ள பெண்களிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். சில நேரங்களில், பல ஆண்கள் இருக்கும் ஸ்டுடியோக்களில் உங்களது கருத்துகளை வெளிப்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஆனால், உங்களை நம்புங்கள். உங்கள் யோசனைகளுக்காக போராடுங்கள். உங்கள் குரல் அனைவருக்கும் தெளிவாக கேட்கும் வகையில் இருக்க வேண்டும்," என அவர் கூறினார்.

    • அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ளார். | Movie directed by debut director Subash K Raj
    • ஏஜிஎஸ் 28 படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

    ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்காலிகமாக 'AGS 28' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ளார்.

    படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஏஜிஎஸ் நிறுவனம் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. அதில், "ஏஜிஎஸ் 28 படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதல் கிளாப்பில் இருந்து இறுதி 'ஷாட் ஓகே' வரை, உற்சாகம், கடின உழைப்பு, சிறந்த சினிமா அனுபவம் நிறைந்த பயணமாக இருந்தது. இந்த படத்திற்காக முழு மனதுடன் உழைத்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், ஜான் கொக்கன், பவன், வினோத் சாகர், பாலா ஹாசன் ஆர் மற்றும் திலீபன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    தொழில்நுட்பக் குழுவில், ரவி பஸ்ரூர் இசையமைக்க, அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பும், சண்டை இயக்குநராக ஃபீனிக்ஸ் பிரபு ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பத்தி எஸ். அகோரம், கல்பத்தி எஸ். கணேஷ், கல்பத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். அர்ச்சனா கல்பத்தி இந்தப் படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக உள்ளார்.



    • நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன்.
    • என்னை யாரும் எளிதில் கணிக்க முடியாது என்ற ரீதியில் தான் பயணிக்கிறேன்.

    'சித்திரம் பேசுதடி', 'வெயில்', 'அசல்' போன்ற படங்களில் நடித்த முன்னணி நடிகையான பாவனா, சில வருடங்கள் தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தார். தற்போது மீண்டும் தமிழில் அவர் கதைகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் பாவனாவின் 90-வது படமாக தயாராகியுள்ள 'அனோமி: தி ஈக்வெஷன் ஆப் டெத்' என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் தடயவியல் நிபுணராக அவர் நடித்துள்ளார். ரகுமான், பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் திரிஷ்யா ரகுநாத் நடித்துள்ளனர். ரியாஸ் மரத் எழுதி, இயக்கியுள்ளார்.

    இதுகுறித்து பாவனா கூறும்போது, ''நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறேன். அந்தவகையில் பான் இந்தியா மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் நடித்துள்ளேன். தொடர்ந்து என் பயணம் நீளும்.

    என்னை பொறுத்தவரை நான் வலிமையாக இருக்கிறேன். வலிமையான கதைகளை தேர்வு செய்கிறேன். என்னை யாரும் எளிதில் கணிக்க முடியாது என்ற ரீதியில் தான் பயணிக்கிறேன். சினிமாவில் என் பயணம் இன்னும் தூரமானது. அதை நோக்கி செல்கிறேன்'' என்றார்.

    ×