என் மலர்
நீங்கள் தேடியது "S.R.M. Team"
- பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். 25-12, 26-24, 25-17 என்ற நேர்செட்டில் பி.கே.ஆர். (கோபி) அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
- எத்திராஜ் 25-20, 25-27, 25-18, 27-25 என்ற கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது.
சென்னை:
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில பள்ளி மற்றும் கல்லூரி அணிகள் இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.
கல்லூரி ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் டி.ஜி.வைஷ்ணவா 25-21, 17-25, 25-23, 25-21 என்ற செட் கணக்கில் டி.பி.ஜெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. எஸ்.ஆர்.எம். 25-16, 13-25, 25-16 என்ற செட் கணக்கில் ஜமால் முகமதுவை (திருச்சி) தோற்கடித்து 3-வது இடத்தை பிடித்தது.
பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். 25-12, 26-24, 25-17 என்ற நேர்செட்டில் பி.கே.ஆர். (கோபி) அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. எத்திராஜ் 25-20, 25-27, 25-18, 27-25 என்ற கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க வாழ்நாள் தலைவர் ஆர்.அர்ஜூன் துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். தமிழ்நாடு கைப்பந்து சங்க துணை சேர்மனும், சுங்க இலாகா உதவி கமிஷனருமான எம்.அழகேசன், பொருளாளர் எம்.பி.செல்வகணேஷ், இணை செயலாளர் ஏ.மகேந்திரன், போட்டி அமைப்பு குழு துணைத்தலைவர் பி.ஜெகதீசன், இயக்குனர் ஏ.பழனியப்பன், செயலாளர் சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.






