என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்டாலிக் லெகங்கா"

    • லெகங்கா இளம் பெண்களின் விருப்பமான திருமண உடையாக மாறி இருக்கிறது.
    • தற்போது பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது.

    வட இந்திய திருமணங்களில் மட்டுமே கவனம் ஈர்த்த லெகங்கா தற்போது தமிழ்நாட்டு இளம் பெண்களின் விருப்பமான திருமண உடையாக மாறி இருக்கிறது. திருமண வரவேற்பின் போது மணப்பெண்கள் பலரும் லெகங்கா அணிவது அதிகரித்து வருகிறது. நீண்ட பாவாடை, வேலைப்பாடுகள் நிறைந்த ரவிக்கை, அதற்கேற்ற துப்பட்டா என இருந்த லெகங்காவில் தற்போது பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது. மணமகளின் அழகுக்கு அழகு சேர்க்கும் லெகங்கா வகைகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

     படேல் லெகங்கா:

    பேஷன் துறையில் அதிகமாக பெண்களை கவரும் ரகங்களில் படேல் லெகங்காவும் ஒன்று. மெஹந்தி, சங்கீத் போன்ற பகல்நேர திருமண நிகழ்வுகளில் மணமகளை ஜொலிக்கச் செய்யும் இந்த உடைகள். வெளிர் நிறங்களில் தான் பெரும்பாலும் கிடைக்கின்றன. எடை குறைவாக இருப்பது இவற்றின் சிறப்பாகும். ஆர்கன்சா முதல் வெல்வெட் வரை பல்வேறு துணி ரகங்களை பயன்படுத்தி படேல் லெகங்கள் தயாரிக்கப்படுகிறது.

     மெட்டாலிக் லெகங்கா:

    மாலைநேர நிகழ்வுகளில் தனித்து தெரிய விரும்பும் பெண்களுக்கு ஏற்ற ரகம் இதுவாகும். பட்டு, புரோக்கேட் மற்றும் ஜார்ஜெட் போன்ற துணி ரகங்களை கொண்டு இவ்வகை லெகங்கா தயாரிக்கப்படுகிறது. தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோக நிறங்களில் தயாரிக்கப்படுவது இதன் சிறப்பாகும். மெட்டாலிக் லெகங்கா அணியும்போது. அதிக ஆடம்பரமில்லாத எளிமையான நகைகளும், 'ஹை ஹில்ஸ்' காலணியும் அணியலாம்.

     அடுக்கு லெகங்கா:

    இடுப்பு முதல் கால் வரை பல்வேறு அடுக்குகளாக தயாரிக்கப்படும் அடுக்கு லெகங்கா, அணிபவரின் அழகுக்கு அழகு சேர்க்கும். டல்லே முதல் ஆர்கன்சா வரை பல்வேறு துணி ரகங்களை பயன்படுத்தி குறைந்த எடையுடன் இது தயாரிக்கப்படுகிறது.

    எந்த நிறத்தை தேர்வு செய்யலாம்?

    சிவப்புடன் தங்கநிறம் கலந்துள்ள வண்ணத்தை திருமண விழாவுக்கு அணிந்தால் ஆடம்பரமான தோற்றத்தை தரும். ஆரஞ்சு, சிவப்பு போன்ற வண்ணங்கள் மேலும் இளமையாகக் காட்டும். மஞ்சள் மற்றும் பச்சை இரண்டும் இணைந்த நிறம் கொண்ட லெகங்கா அணிந்தால் உங்கள் தோற்றம் மிடுக்காக மாறும்.

     கேப் லெகங்கா:

    சமீப காலமாக பிரபலமாகி வரும் கேப் லெகங்கா திருமணத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றது. மிருதுவான ஷிப்பான் முதல் வெல்வெட் வரை பல்வேறு துணி ரகங்களில் தயாரிக்கப்படுகிறது. ஆடம்பரமான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்படும் கேப் லெகங்கா அணிபவரின் தோற்றத்தை மிடுக்காகக் காட்டும்.

    பிரிஞ்ச் லெகங்கா:

    பாவாடை, ரவிக்கை, துப்பட்டாவுடன் கூடிய பிரிஞ்ச லெகங்கா பார்ப்பதற்கும். அணிவதற்கும் மிடுக்காக இருக்கும், இதன் வடிவமைப்பில் தற்போது 'போ ஹேமியன்" எனும் புது பாணி சேர்க்கப்பட்டுள்ளது.

     ஜாக்கெட் லெகங்கா:

    மேலே ஓவர் கோர்ட் போன்ற மாடலில் தயாரிக்கப்படும் இது குளிர்காலங்களில், அணியும்போது கதகதப்பாகவும். ஸ்டைலாகவும் இருக்கும். வெல்வெட் மற்றும் புரோகேட் போன்ற கனமான துணியால் ஜாக்கெட் லெகங்கா தயாரிக்கப்படுகிறது.

     

    ×